"வெல்லும் படை இது விலகிடு விலகிடு.." தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! ஆவேசமாக பாடும் கமல்!
சென்னை: வெல்லும் படை இது விலகிடு விலகிடு என்ற பாடலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த பாடலில் திமுக கூட்டணி கட்சிகளின் கொடியுடன் பிரச்சார பாடல் பாடப்பட்டுள்ளது. தலைவன் இருக்கின்றான் என்ற பெயர் இந்த பாடலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "வெல்லும் படை இது விலகிடு விலகிடு"
தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் #தலைவன்இருக்கின்றான் இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள்.
உங்கள்,
கஹா.

அவர் வீடியோவில் வெளியிட்டிருப்பதாவது: அறிவார்ந்த தமிழ்மக்கள் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. அதன் விளைவுதான் தலைவன் இருக்கின்றான் என்ற பாடல்!
அதில் ஒரு வரி... என்றும் தமிழகம் வென்றிட வேர்விட, விதையாய், செடியாய், மரமாய், காடாய், வீடாய், நாடாய் உலகாய் விரிந்திட வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே! என தெரிவித்துள்ளார்.
"தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலை கமல்ஹாசனே பாடியுள்ளார். இந்த பாடலில் திமுக உள்பட கூட்டணி கட்சிகளின் கொடிகள், சேலத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதோ அந்த பாடல் வரிகள்:
பப்பற பற பற பற பற பற
பறை வருது பறை வருது
பப்பற பற பற பற பற பற
பறை வருது பறை வருது
தலைவன் இருக்கின்றான்
எங்கள் தலைவன் இருக்கின்றான்
திராவிட தலைவன் இருக்கின்றான்
தலைவன் இருக்கின்றான்
திராவிட தலைவன் இருக்கின்றான்
இந்திய நாட்டின் மூலைமுடுக்கிலும்
தலைவன் இருக்கின்றான்
இன்னல் வருங்கால் காத்திட என்றும் படையாய் நிற்கின்றான்
திராவிட படையாய் நிற்கின்றான்
வெல்லும் படை இது விலகிடு விலகிடு
வெல்லும் பற பற பற பற பறை
வெல்லும் படை இது விலகிடு விலகிடு
வெல்லும் பற பற பற பற பறை
இன்றும் நமதே
நாளை நமதே
இன்றும் நமதே
நாளை நமதே
தலைவன் இருக்கின்றான்
திராவிட தலைவன் இருக்கின்றான்
இந்திய நாட்டின் மூலைமுடுக்கிலும்
தலைவன் இருக்கின்றான்
இன்னல் வருங்கால் காத்திட என்றும் படையாய் நிற்கின்றான்
வெல்லும் படையாய் நிற்கின்றான்
முரசொலி முரசொலி முரசொலி முரசொலி
தாளம் பிடிச்சி
மய்யம் புடிச்சி
அடிடா அடிடா அடிடா அடிடா அடிடா
உலகின் உயிர்கள் தேவை அனைத்தும்
தந்திடும் நம் பூமி
தகிடதாம் தகிடதாம் தகிடதாம்
தாம் தக்க தாம் தக்க தாம்
தனிமனிதன் ஒருவன் பேராசைகளைத் தாளாதிப் பூமி
தாளா தாளா தாளா தாளா
தாளாதிப்பூமி
ஆலைகள் செய்யவும்
சாலைகள் செய்யவும்
நாங்களும் விரும்புகின்றோம்
ஆமாம் நாங்களும் விரும்புகின்றோம்
ஆளை ஒதுக்கி
ஆலைகள் செய்யவும்
உழவை ஒதுக்கி
திரவியம் தேடவும்
தடையாய் நின்றிடுவோம்
வெற்றிப் படையாய் நின்றிடுவோம்
தடையாய் படையாய் (3)
வென்றும் நின்றிடுவோம்
யாம் வென்றும் நின்றிடுவோம்
கண்டம் அதிர எம் கை மேளமதிர
சங்கும் தாரையும் கூடி முழங்க
சண்ட மாருதம் போல எழுந்து
நீதி சொல்லிடும் தேவர் மயக்கம்
தீரச் செய்திடும் வீரக்குஞ்சுகள்
யாமுளோம் யாமுளோம்
தும் தும் துமிகிட துமிகிட துமிகிட
தீதும் பொடி பட கடி நட கடி நட
என்றும் தமிழகம் வென்றிட வேர்விட
விதையாய் செடியாய் மரமாய் காடாய் நாடாய் உலகாய்
விரிந்திட விரிந்திட
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே
முண்டியடிக்கும் முதலீட்டாளர்
அண்டை நாட்டை விஞ்சிடும் வர்த்தகம்
மண்ணையும் தொட்டு
விண்ணையும் முட்டும்
தமிழும் இனமும் வாழ்ந்து மகிழ்ந்திட
எமக்கும் உண்டு ஆயிரம் கனவுகள்
இப்படி ஒரு பாடலை கமல் பாடியுள்ளார். அவர் அந்த பாடலை ஆவேசத்துடன் பாடியுள்ளார்.
முழு பாடலை கேட்கவும் காணவும்
என்ற லிங்கில் பார்க்கவும்.












Click it and Unblock the Notifications