• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விஷால் கைது.. விடுதலை.. சங்கத்திற்கு சீல்.. திறப்பு.. கமல் போட்ட ஒத்த ட்வீட்

|
  விஷால் விவகாரம்..நன்றி சொன்ன கமல்ஹாசன்- வீடியோ

  சென்னை: விஷாலுக்கு கமல் அளித்துள்ள ஆதரவுக்கு என்ன காரணம் தெரியுமா?

  தயாரிப்பாளர் சங்க ஆபீசுக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு... பூட்டை உடைக்க முயற்சி.. போலீசாருடன் வாக்குவாதம், கைது என்று அடுத்தடுத்த சம்பவங்களால் ஒரே நாளில் பரபரப்பானது சென்னை.

  விஷாலை ஏதோ குற்றவாளி போல நாள் முழுவதும் சித்தரிக்கப்பட்ட நிலையும் உருவானது. ஆனால் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  பூட்டுவீர்களா?

  பூட்டுவீர்களா?

  விஷால் போலீசாரிடம் கேட்ட அத்தனை கேள்விகளையும் கோர்ட்டே திருப்பி போலீசை கேட்டது. "விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்க வேண்டியதுதானே, அதுக்காக சங்கத்தை பூட்டுவீர்களா?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். இப்படி நீதிமன்றம் விஷால் பக்கம் இருப்பதை அறிந்து தமிழக போலீசார் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆனால் இது எல்லாவற்றிற்கும் மேலாக, கமல் இந்த விஷயத்தில் நுழைந்ததுதான் பெரிய ஹைலைட்.

  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

  கமலுக்கும் விஷாலுக்கும் ஏற்கனவே நல்லுறவு இருந்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது, 144 தடை உத்தரவின்போது, காயமடைந்தவர்களை கமல் சந்திக்க சென்றதற்கு, கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு விஷாலை தவிர வேறு யாருமே அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

  அக்கறையுள்ள மனிதன்

  அக்கறையுள்ள மனிதன்

  "அப்பாவிகளை கமல் பார்க்க சென்றது தவறா? என்ன கொடுமை இது? நடிகராக, அரசியல்வாதியாக, ஒரு சமூக அக்கறையுள்ள மனிதனாக இதைகூட செய்ய அனுமதி இல்லை எனில், கடவுள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று" சொல்லி இருந்தார்.

  முதல் ஆளாக வரவேற்பு

  முதல் ஆளாக வரவேற்பு

  அப்படித்தான் விஷால் சம்பந்தமன ஒரு கேள்வியை செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கமலிடம் எழுப்பியிருந்தனர். அதற்கு கமல், "விஷால் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயப்பட வேண்டும்" என்று சொல்லி இருந்தார். இது ஆளும் தரப்புக்கு மேலும் எரிச்சலை தந்தது. அதேபோல நேற்று மாலை தீர்ப்பு வந்ததும் வராததுமாக முதல் ஆளாக கமல் இதற்கு வரவேற்று ட்வீட் போட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

  காரசார கண்டனம்

  காரசார கண்டனம்

  ஏற்கனவே கமலுக்கு ஆளும் தரப்பை பிடிக்காதுதான். காரசார வார்த்தைகளுடன் கண்டனங்களை எப்போதுமே தெரிவித்து வருபவர். விஷால் விஷயத்திலும் அரசு இப்படி நடந்து கொண்டதாலும், விஷால் மீது நியாயம் உள்ளதாக கமல் நினைத்ததாலுமே ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.

  நிலைப்பாடு

  ''நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி. தோழர். நடிகர்@VishalKOfficial அவர்களுக்கு நீதி கிடைத்ததற்காக'' என்று தனது நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் தெள்ள தெளிவாக அறிவித்துள்ளார் கமல்.

  ஒத்த ட்வீட்

  ஒத்த ட்வீட்

  விஷால் கைதுக்கு ஒரு தரப்பினரும், ஒரு கட்சியினரும் வாயே திறக்காத நிலையில் கமல் போட்ட இந்த ஒத்த ட்வீட் எல்லாரையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

  English summary
  Kamal Hasan in his twitter, Once Again Thanks to Chennai High Court for Vishal had justice
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X