1 ரூபாய்க்கு இட்லி..பசியாற்றும் கமலாத்தாள் பாட்டிக்கு மேடையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த கவுரவம்
சென்னை: கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கௌரவித்தார். ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சியின் நூலும் கமலாத்தாள் பாட்டிக்கு முதல்வரால் வழங்கப்பட்டது.
கோவை ஆலந்துறை அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று அங்கு உள்ளவர்களால் அழைக்கப்படுகிறார்.
25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்ய தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார்.

பசியாற்றும் பாட்டி
ஹோட்டல்களில் ஒரு இட்லி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஏழை, எளிய மக்களின் பசியாற வேண்டும் என்று நோக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும், சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார்.

பரவிய புகழ்
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா 2 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக கோவையில் விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வந்த கமலாத்தாள் குறித்து புகழ்ந்திருந்தார்.

ஒரு ரூபாய் இட்லி பாட்டி
அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவு வைரலானதை அடுத்து 'ஒரு ரூபாய் இட்லி பாட்டி'கமலாத்தாள் பரவலாக அறியப்பட்டார். லாப நோக்கமில்லாமல் இதை செய்வதன் மூலம் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் வயிறார சாப்பிட முடியும் என்று கமலாத்தாள் கூறினார்.

கேஸ் அடுப்பு
இதையடுத்து கோவையில் உள்ள பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது. அதன்பிறகும் தொடர்ந்து மலிவான விலையில் உணவு வழங்கி வந்த கமலாத்தாள் சொந்தமான இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இந்த சேவையை வழங்க வேண்டுமென விரும்பினார். இதனையடுத்து மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. மேலும் அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டிடத்தையும் கட்டிக்கொடுத்தது.

முதல்வர் ஸ்டாலின் கவுரவம்
இந்நிலையில் கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சரின் மு க ஸ்டாலின் இன்று கௌரவித்தார். ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சியின் நூலும் கமலாத்தாள் பாட்டிக்கு முதல்வரால் வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு 'ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி' என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கி அவரை நெகிழ்ச்சி கொள்ள செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதாஜீவன்,ஏ.வ. வேலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications