சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எடப்பாடியார், ஸ்டாலின்".. சின்ன புள்ளன்னா நினைச்சீங்க.. வச்சு செய்ய போறேன் பாருங்க.. பத்மப்ரியா செம

மநீம வேட்பாளர் பத்மபிரியாவுக்கு மதுரவாயல் தொகுதியில் செல்வாக்கு கூடுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு தேர்தல் களத்திலும் ஒரு விதமான புதுமை இடம் பெறுவதை தவிர்க்க முடியவில்லை. முன்பு நாம் தமிழர் கட்சி அந்த புதுமை நாயகனாக விளங்கியது. ஆனால் இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யமும் இணைந்து மக்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

குறிப்பாக சென்னை புறநகரான மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பத்மப்ரியாதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இளம் வயதான பத்மப்ரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே அலை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

படு மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார் பத்மப்ரியா. அவருக்காக ஒரு இளையோர் பட்டாளமே களம் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறது. இவர்களின் பிரசாரமும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் சத்தம் போடாமல் ஒரு சாதனை படைத்துள்ளார் பத்மப்ரியா.

திடீர் ட்விஸ்ட்.. திடீர் ட்விஸ்ட்.. "2016".. திமுகவை இப்படி மிஸ் பண்ணிருச்சே தேமுதிக.. பேசாம இருந்திருக்கலாம்!

 தரவிறக்கம்

தரவிறக்கம்

அதாவது இவரது வேட்புமனுவை பெருமளவில் பலரும் தரவிறக்கம் செய்துள்ளனர். அதாவது தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்துள்ளனர். பெருமளவில் என்றால் ஆயிரம், இரண்டாயிரம் என்றெல்லாம் இல்லை, லட்சக்கணக்கில் தரவிறக்கம் செய்துள்ளனர். அத்தனை பேர் வேட்பாளர் குறித்த விவரத்தை அறிய ஆர்வம் காட்டியுள்ளனர்.

சின்னம்

சின்னம்

இது வரலாறு காணாது. முன்பெல்லாம் கட்சிப் பெயரைத்தான் பார்ப்பார்கள். கழுதையை நிறுத்தினால் கூட அந்தக் கட்சிக்காக நிறுத்தினால் வெல்லும் என்றெல்லாம் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு சின்னமும், கட்சியும்தான் மக்கள் மனதில் பதிந்துள்ளது. ஆனால் இப்போது மக்கள் வேட்பாளர்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதைத்தான் பத்மப்ரியா மேட்டர் நிரூபிக்கிறது.

 நாம் தமிழர்

நாம் தமிழர்

பத்மப்ரியாவின் வேட்பு மனுவை கிட்டத்தட்ட 3 லட்சத்து 11 ஆயிரத்து 466 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசனின் மனுவை 3 லட்சத்து 55 ஆயிரத்து 685 பேர்தான் தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்... நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் மனுவை அதிக அளவில் அதாவது 17 லட்சத்து 76 ஆயிரத்து 261 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் குறித்தெல்லாம் நமது வாக்காளர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான்.. முதல்வர் மனுவை 9295 பேர்தான் பார்த்துள்ளனர். ஸ்டாலின் மனுவை வெறும் 4351 பேர்தான் பார்த்துள்ளனர். பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது இது.. இதைத்தான் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று சொல்வார்களோ!

English summary
Kamalhasans MNM Maduravoyal Candidate Padmapriyas affidavit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X