லோக்சபாவில் கனிமொழி கேட்ட கேள்வி.. "சம்மந்தம் இல்லாமல்" பதில் சொன்ன மத்திய அமைச்சர்.. சர்ச்சை
சென்னை: ஆதிச்சநல்லூர் அகழாய்வு இடம் தொடர்பாக திமுக எம்.பி. கேட்ட கேள்விக்கு, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சர் பதிலை பார்த்து ஆச்சரியப்பட்டு போனதாக கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
அப்படி என்ன நடந்தது.. ஏன் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இதோ அதுகுறித்த விவரம்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது ஆதிச்சநல்லூர். தொல்லியல் சிறப்புகள் வாய்ந்த ஊர். அகழாய்வில் பல ஆச்சரியத்தக்க முடிவுகள் வந்தபடி உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த வருடம், பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொல்லியல் சிறப்புமிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மத்திய அமைச்சரிடம் கேள்வி
ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. எனவே தூத்துக்குடி லோக்சபா எம்பி கனிமொழி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு எழுத்துப்பூர்வமாக கனிமொழி கேள்வி எழுப்பினார்.

அடுக்கடுக்கான கேள்விகள்
2020-21ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் துவங்கி விட்டதா என்றும், இந்த இடத்தை மேம்படுத்தும் பணிகள் துவங்கி விட்டதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பினார். அவ்வாறு தொடங்கியிருந்தால் அது பற்றிய விவரம் தரப்பட வேண்டும், ஒருவேளை துவங்காவிட்டால் ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சர்ச்சையான பதில்
இதற்கு மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் தான் இப்போது சர்ச்சைக்கு காரணமாகியிருக்கிறது. அமைச்சர் தனது பதிலில், சோலார் மூலமாக இயங்கக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன, கழிப்பிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆடியோ மூலமாக மக்களுக்கு புரிய வைக்கும் விஷுவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, தகவல் பலகை பொருத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

நிஜத்தில் அப்படி இல்லை
மேலும், அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்தாய்வு கட்டத்தில் திட்ட பணிகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் இந்த எழுத்துப்பூர்வமான பதிலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர் கனிமொழி. அதன், பின்னூட்டத்தில் அருங்காட்சியகம் இருப்பதாக கூறப்பட்ட இடத்தில் சுவர்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், சோலார் லைட் இருப்பதாகவும் அமைச்சர் பதில் அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படி எதையுமே பார்க்க முடியவில்லை.

நீண்ட லிஸ்ட்
மத்திய அமைச்சர் கொடுத்துள்ள இந்த பதில் ஆச்சரியமளிக்கிறது. முதலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், அதுதான் எங்கள் முதன்மை கோரிக்கை என்று கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் சொல்லக் கூடிய தகவல்கள் 100 சதவிகிதம் உண்மையானதாக இருக்க வேண்டும். அதுதான் மரபு. ஆனால் ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறை ஆய்வு பகுதியில் எந்த ஒரு வளர்ச்சியும் நடக்காத நிலையில் மத்திய அமைச்சர் கொடுத்துள்ள நீண்ட லிஸ்ட் உண்மைக்கு மாறாக இருக்கிறது என்பதுதான் சர்ச்சைக்கு காரணம் ஆகியிருக்கிறது.

தவறான தகவல் அளிக்க கூடாதே
தவறான தகவல்களை அதிகாரிகள் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஒரு அமைச்சர் இப்படி தவறான தகவலை தந்துள்ளார் என்று, கனிமொழியின் டுவிட்டர் பின்னூட்டத்தில் பலரும் கருத்து தெரிவிப்பதை பார்க்கமுடிகிறது. ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பதிலை அளித்துள்ளது சரியான முன்னுதாரணம் கிடையாது என்று அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications