Rs 8000: மாற்றி யோசித்த கனிமொழி! ரூ 8000 கூப்பன் எப்படி செயல்படுத்தப்படும் என விளக்கம்!
சென்னை: ரூ 8000 இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி விளக்கமளித்துள்ளார். மேலும் அதிமுகவின் பிரிட்ஜ் அறிக்கை குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி கூறியிருப்பதாவது: வளர்ச்சியை மையப்படுத்தியதாக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. எப்போதும் போலவே திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சென்று பெறப்பட்ட அவர்களது கருத்துகள்தான்.

கிட்டத்தட்ட 80 ஆயிரம் கருத்துகளை அவர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். ஈமெயில் அல்லது வாட்ஸ்ஆப், ஏஐ மூலமாக, நேரடியாக 12 நகரங்களில் மக்களை சந்தித்து அவர்களிடம் பெற்ற மனுக்களை வைத்துதான் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதைத் தாண்டி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியுமா இல்லையா என்றெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கை எழுதக் கூடாது என்ற கருத்தைத்தான் முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஒரு தொலைநோக்கு பார்வையோடு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். இந்த அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில்தான் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிருக்காக ரூ 8 ஆயிரம் வழங்கக் கூடிய கூப்பனை எப்படி செயல்படுத்த போகிறோம் என்றால் வருமான வரி செலுத்தாமல் இருக்கக் கூடிய பெண்களுக்கு இந்த கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் கடைகளில், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதிமுக கொடுக்கும் பிரிட்ஜ் என்பது பலரது வீடுகளில் இருக்கலாம். தேவைப்படும் பொருளை வாங்குவதற்குரிய சாய்ஸ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்படும்.
ஒரு டிவியை வைத்திருப்பார்கள். அதை Upgrade செய்ய விரும்புவார்கள். எனவே இந்த கூப்பனை வைத்து மாற்றிக் கொள்ளலாம். செம்மொழி பூங்காக்களை அறிவித்திருக்கிறோம், பருவநிலை மாற்றத்தையும் கணக்கில் எடுத்துள்ளோம்.
கல்வி, பொருளாதாரம், தொழில் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சி, எல்லா தரப்பு மக்களுக்கும் வரவேண்டும் என்பதுதான் முதல்வரின் கருத்தாக இருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்தவுடன் அதை நிபுணர்களிடம் பேசி எதையெல்லாம் செய்ய சாத்தியம் இருக்கிறதோ, அதை மட்டுமே வாக்குறுதியாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
தேர்தல் அறிக்கையில் மாநில அரசின் கடனை அடைப்பதற்கான வழிகள் குறிப்பிடவில்லை என்றாலும் அது குறித்து ஏற்கெனவே பல தருணங்கள் பேசப்பட்டுள்ளன. உண்மையை பேசக் கூடிய தேர்தல் அறிக்கை, மக்கள் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறார்களோ அந்த தேர்தல் அறிக்கைக்கு செல்வாக்கு இருக்கும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை, அண்ணா அறிவாலயத்தில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் 5 ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ 1500 மாத உதவித் தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
புதிதாக 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications