தகுதிவாய்ந்த "ஒருவருக்கு" தாதாசாகேப் பால்கே விருது.. கனிமொழி ட்வீட்!
சென்னை: திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக தாதாசாஹேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக மகளிரணி செயலாளர் மற்றும் லோக்சபா எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு தாதாசாஹேப் பால்கே விருது நேற்று வழங்கப்பட்ட நிலையில், தலைவா என்று குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கட்சி பேதம் மறந்து அனைத்து தரப்பும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். சக கலைஞர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

கமல் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் கனிமொழி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தகுதிவாய்ந்த ஒருவர்
திரையுலகில் தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்ட, தகுதிவாய்ந்த ஒருவருக்கு, பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்! இவ்வாறு தமிழிலும், பிறகு அதையே ஆங்கிலத்திலும் கனிமொழி கூறியுள்ளார்.

பெயர் குறிப்பிடவில்லை
அதேநேரம், கனிமொழி, ரஜினிகாந்த் என்று பெயரை குறிப்பிடவில்லை . தகுதி வாய்ந்த ஒருவர் என்று மறைமுகமாக ரஜினிகாந்தை குறிப்பிட்டுள்ளார் .

ரசிகர்கள் ஏக்கம்
ரஜினி ரசிகர்கள் கனிமொழி ட்விட்டர் பின்னூட்டத்தில் ரஜினிகாந்த் என்ற பெயரை குறிப்பிட்டு இருக்கலாம் என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.