ஆடை குறித்து போலி வீடியோ! அமைச்சர் கீர்த்தனாவின் ’தக் லைஃப்’ பதிலடி! சப்போர்ட்டுக்கு வந்த கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரைகுறை ஆடை அணிந்தது போல ஒரு பொய்யான வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல எனவும், அப்படியே இருந்தாலும் என்ன பிரச்சனை? என பதிலடி கொடுத்திருந்தார் அமைச்சர் கீர்த்தனா. இந்த நிலையில் பெண்கள் மீதான அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது எனவும், பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை குறிப்பிடாமல் ஆதரவு தெரிவித்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.

தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் கீர்த்தனா. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தமிழக வெற்றிக் கழக பெண் அமைச்சர்களின் முக்கியமானவராக கருதப்படுகிறார். அதே நேரத்தில் தொடர்ந்து இவர் சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.

Kanimozhi Keerthana Fake Video

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக நவநாகரீக உடை அணிந்து படி அவர் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மட்டும் அல்லாமல் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும் கீர்த்தனாவுக்கும் பிரச்சனை இருப்பதாகவும். இதனால் கீர்த்தனாவை அமைச்சர் பதவியில் இருந்து விஜய் நீக்க போகிறார் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

அமைச்சர் கீர்த்தனா

ஆனால் கீர்த்தனா தொடர்ந்து இதனை மறுத்து வந்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் மேலைநாட்டு பாணியில் உடை அணிந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்குவது போன்ற காணொளி அதிகமாக பகிரப்பட்டது. மேலும் அந்தப் பெண் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா எனவும், அவரது உடை மற்றும் தோற்றத்தைக் குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

போலி வீடியோ

அதே நேரத்தில் அமைச்சர் கீர்த்தனா தனது பெயரில் பரப்பப்படும் வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும் இது திட்டமிட்டு அவதூறு பரப்பும் செயல் எனக் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அந்த வீடியோவில் இருப்பது நானாகவே இருந்தாலும் அதில் என்ன தவறு என எதிர் கேள்வி எழுப்பினார். பெண்களின் உடை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போக்கை இனி அனுமதிக்க முடியாது எனவும் இந்த சர்ச்சைக்குள் தற்செயலாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக தனது ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்த அவர், பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என கூறியிருந்தார்.

கனிமொழி

இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை குறிப்பிடாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் திமுக எம்பியும் துணை பொது செயலாளர் கனிமொழி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

மலினமான அரசியல்

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+