கோவிலுக்காக முறைகேடாக பணம் வசூல்? வங்கி கணக்கு விவரம் தர, கார்த்திக் கோபிநாத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதனை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பியூஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக பாஜக ஆதரவாளரும், யு டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

கார்த்திக் கோபிநாத் கைது
இந்த விசாரணையின் அடிப்படையில் மே 29ம் தேதி கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கார்த்திக் கோபிநாத் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இந்நிலையில் பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கார்த்திக் கோபிநாத்தின் மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்கொடை வசூலை தொடங்கிய மூன்று நாட்களிலேயே 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாமென அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிதியை பராமரிக்க திருப்பணி கணக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை கோவில் பணிகளுக்கு தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும், அப்படி பயன்படுத்தியதற்கான காரணங்களை தெரிவிக்காமல் கோவில் செயல் அலுவலர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தாமலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு தரப்பில் வாதம்
இந்த மனுக்கள் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மனு மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். சிதிலமடைந்த கோவிலின் காட்சிகளை வெளியிட்டு, மக்களிடம் அனுதாபம் தேடி பணம் வசூல் செய்துள்ளதாகவும், 5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் கடைசி வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வசூலிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார். அதோடு வசூலித்த பணத்தில் ரூ.2 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனிப்பட்ட கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் அவரது கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளதாகவும், மிலா ஆப் மூலம் பணம் வசூலித்ததே குற்றம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கார்த்திக் கோபிநாத் தரப்பு வாதம்
கார்த்தி கோபிநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதிலமடைந்த கோவிலை சரி செய்ய கோரிக்கை விடுத்ததை ஏற்று மக்கள் பணம் அளித்ததாகவும், கோவிலை சரி செய்ய அரசு முயற்சிக்கவில்லை எனவும், அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக நடந்ததாகவும், முறைகேடுக்கு வாய்ப்பில்லை எனவும், பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை எனவும் வாதிட்டார். கார்த்தி கோபிநாத் தனது சொந்த பணத்தையும் வழங்கியுள்ளார் எனவும் வசூல் செய்யப்பட்ட பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட அவரால் எடுக்க முடியாது எனவும், தனிப்பட்ட கணக்கை இதில் குறிப்பிடக்கூட இல்லை எனவும், ரூ.33 லட்சம் மொத்தமாக மிலா ஆப்பில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதோடு நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை மிலா ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், பணம் என்னுடைய பொறுப்பில் இல்லை எனவும், பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் படி 3மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாக கார்த்திக் கோபிநாத் தரப்பில் வாதிடப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத் தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூன் 13) தள்ளிவைத்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications