“கூட்டம் கடுமையாக அதிகரித்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்?" தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், தவெக தரப்புக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். "கூட்டம் அளவை கடந்ததும் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரை கரூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். போலீசார், அரசு தரப்பு வாதங்களை முன்வைத்தது.

கைது செய்யவேண்டும் என போலீஸ் வாதம்
இந்த வழக்கு விசாரணையில், காவல்துறை அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், 41 உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் கூறி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வாதிட்டது. "போலீஸ் தரப்பு, விஜய் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெகவினர் நிபந்தனைகளை மீறினர்," என்று வாதிட்டது.
பின்னர், தவெக தரப்பு, "ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக்கூடாது. விஜய் பிரச்சாரத்திற்கு வந்தது தானாக வந்த கூட்டம், வண்டி வைத்து அழைத்து வரவில்லை. 10,000 பேர் வருவார்கள் என காவல்துறையிடம் கூறினோம், ஏனெனில் சம்பள நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று கணித்தோம்" என்று வாதிட்டது.
ஆதவ் அர்ஜுனா மறுத்தார்
காவல்துறை தரப்போ, "உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களை அழைத்து ஆய்வு செய்தோம். 23 ஆம் தேதி லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது. கூட்டம் அளவை கடந்ததும், பேருந்தை முன்பாக நிறுத்தி பேசச் சொல்லி கூறினோம், ஆனால் ஆதவ் அர்ஜுனா மறுத்தார்" என்று தெரிவித்தது. "கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்" என்று தவெக தரப்பு வாதிட்டது.
3 இடமுமே போதாது
நீதிமன்ற நீதிபதி பரத் குமார், தவெக தரப்புக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பினார். "விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்? சம்பள நாள், வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் அல்லது மற்ற தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார், பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் கோரிய 3 இடமுமே பொருத்தமற்றது. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை
"கூட்டம் அளவை கடந்ததும் நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் தரப்பில், "விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் நெரிசல் ஏற்பட்டது. 3 மணிக்கே வந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும். தவெக நிர்வாகிகள் போலீசார் சொல்வதை கேட்வில்லை. போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றனர். இது உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணம்." எனத் தெரிவித்தனர்.
மேலும், "அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார், அப்போதே நிராகரிக்க வேண்டியது தானே? பரப்புரை நடைபெறும் இடத்திற்கு விஜய் வேண்டுமென்றே காலதாமதமாக வந்துள்ளார். 20 நிமிடத்தில் வர வேண்டிய வாகனத்தை 2 மணி நேரமாக கடக்க வேண்டும் என்றே தாமதம் செய்துள்ளார். மேலும், கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே பலர் மயங்கிய நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தை தவெக தொண்டர்கள் வழிமறித்து தாக்கினர்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் ஆவணங்களின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை எனக் கூறிய நீதிபதி, மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் எனக் கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications