உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..பதில் சொல்லுங்க முதல்வரே - குஷ்பு ட்வீட்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா என்று கேட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாஜகவின் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி? பதில் சொல்லுங்க முதல்வர் மு.க ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு இந்த அனுமதி பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி சட்னி
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக, தமிழக பாஜக நிர்வாகிகளும், அமமுக செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி? பதில் சொல்லுங்க முதல்வர் மு.க ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.

திமுக அப்போது எதிர்ப்பு
கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காலத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மே மாதத்தில் திறக்கப்படும் என அப்போதய அதிமுக அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதய திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகை ஏந்திய ஸ்டாலின்
அரசு கொடுக்கும் நிவாரணத் தொகை முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று விடும் என்று கூறி கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பழைய போட்டோக்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பதில் சொல்வாரா முதல்வர்
இதன் காரணமாகவே நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா என்று வடிவேல் பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு. பதில் சொல்வாரா முதல்வர் மு.க ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications