கிளாம்பாக்கம் ரயில் நிலைய ஸ்கைவாக்.. பணிகள் தீவிரம்! பொங்கலுக்கு பயணிகளுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் வருதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. புறநகர் ரயில் இணைப்புக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வந்துள்ளது..275 மீட்டர் நடைமேம்பாலத்தில் இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி முடிந்துவிட்டது.. அடுத்ததாக கிளாம்பாக்கம் ஸ்கைவாக் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. இதுகுறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

2023 டிசம்பரில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு இதுவரை மாநகரப் பேருந்துகளே முக்கிய பொதுப் போக்குவரத்து வசதியாக உள்ளன.. புறநகர் ரயில் இணைப்பு மட்டும் கிடைத்துவிட்டால், வெளியூரிலிருந்து பஸ்ஸில் வருபவர்களும், சென்னைக்குள் ரயிலில் வருபவர்களும் ஈஸியாக மாறிச் செல்லலாம்..

Kilambakkam Skywalk chennai Kilambakkam Update Chennai Infrastructure

கிளாம்பாக்கம் ஸ்கை வாக்

இதற்காக பேருந்து முனையத்தையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் நிறுத்த ரயில்வே ஸ்டேஷ்னையும் இணைக்கும் வகையில் 275 மீட்டர் நீள நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.. தண்டவாளங்களின் குறுக்கே இரும்புத் தூண்களை அமைக்கும் பணி முடிந்துவிட்டது.. பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை ரயில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன..

இப்போது இரும்பு தகடுகளை பொருத்துவது, இணைப்புகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன.. இவை முடிந்ததும் லிப்ட்கள், எஸ்கிலேட்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

ஏன் லேட் - அதிகாரிகள் சொல்வதென்ன

இந்தத் திட்டத்தில் கட்டுமானப் பணிகள் மட்டுமல்ல, பராமரிப்புப் பொறுப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. ஸ்கைவாக்கை யார் பராமரிப்பது என்பதில் CMDA எனப்படும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கும், தெற்கு ரயில்வேக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பணிகள் தாமதமானதாக தெரிகிறது...

சுமார் 26 கோடி ரூபாய் செலவில் ரயில்வே ஸ்டேஷனும், ஸ்கைவாக்கும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முழுக் கட்டமைப்பையும் ரயில்வேயே பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..

ஐஐடி ஒப்புதல் எப்போது

இதனிடையே ஜி.எஸ்.டி. சாலையின் மறுபுறத்தில் நடைமேம்பாலப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.. அங்கு பணிகளை தொடர ஐஐடி சென்னையின் நிபுணர் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.. அனுமதி கிடைத்தால் 2 வாரங்களுக்குள் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..

அப்படியே இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி முடிந்தாலும், எஞ்சிய கட்டுமான வேலைகள், லிஃப்ட்கள், எஸ்கிலேட்டர்கள் போன்றவை ரெடியாக வேண்டும்.. அதன் பிறகே பயணிகள் ரயிலுக்கும் பஸ்ஸுக்கும் எளிதாக மாறிச் செல்ல முடியும்..

பொங்கலுக்கு ரெடியாகுமா

ஆனால், ஸ்கைவாக் திறக்கப்படும் தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.. பல மாதங்களாக இந்த இணைப்புக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு, மீதமுள்ள பணிகள் எப்போது முடியும் என்பதுதான் இப்போதைய கேள்வியாக எழுந்துள்ளது..

இதனிடையே, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க சுமார் 20 கோடியும், நடைமேம்பாலத்துக்கு 6 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.. தீபாவளிக்குள் ரயில் இணைப்பு கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்த பயணிகள், பணிகள் தொடர்ந்து தாமதமாவதால் அடுத்த பொங்கலுக்குள்ளாவது பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.. இருந்தாலும்-, நடைமேம்பாலம் திறக்கப்படும் தேதி குறித்து இதுவரை உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை....!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+