Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் விடுவிப்பு.. கைது ஆனதன் பின்னணி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்..

கடலூரில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.. இவர் பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று ஜோதிடர் கூறினார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

Kili Sodhidar Arrested For Claiming Thangarbachan Victory In Cuddalore Constituency Anbumani Ramadoss

இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்

இதனிடையே வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

Kili Sodhidar Arrested For Claiming Thangarbachan Victory In Cuddalore Constituency Anbumani Ramadoss

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடலூரில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் செல்வராஜ் மற்றும் சீனுவாசன் என்ற ஜோதிடரை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+