காதலிக்கவும், அதை வெளிப்படுத்தவும் பயம் எதற்கு..? கிருத்திகா உதயநிதி ட்வீட்
சென்னை: காதலிப்பதற்கும், அதை வெளிப்படுத்துவதற்கும் அஞ்ச வேண்டாம் எனவும், இயற்கையை அதன் முழு மகத்துவத்தோடு புரிந்துகொள்ள இது ஒரு வழி என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், சினிமா இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தெரிவித்து இருக்கிறார். காதல் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் துணிச்சலாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
திரைப்பட இயக்குநரான கிருத்திகா உதயநிதி, சினிமா தொடர்பாகவும், காதல், அன்பு, வாழ்க்கை, பெண் உரிமை குறித்தும் பல்வேறு கருத்துக்களை ட்விட்டரில் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்.

கிருத்திகா உதயநிதி ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் கிருத்திகா உதயநிதி பதிவிட்டு இருக்கும் கருத்து பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், "காதலிப்பதற்கும், காதலை வெளிப்படுத்துவதற்கும் அச்சம் அடைய வேண்டாம். இயற்கையை அதன் முழு மகத்துவத்தோடு புரிந்துகொள்ள இதுவும் ஒரு வழி." என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உதயநிதி - கிருத்திகா திருமணம்
உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய 2 குழந்தைகள் உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகா உதயநிதியும் தங்கள் காதல் பற்றி பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள்.

காதல் திருமணம்
முதலில் உதயநிதி ஸ்டாலினே கிருத்திகாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதாக தெரிவித்து இருக்கிறார். அப்போது அதை கிருத்திகா உதயநிதி ஏற்க மறுத்ததாகவும் அதன் பின்னர் எப்படியோ தன்னை சம்மதிக்க வைத்துவிட்டார் எனவும் கிருத்திகா ஒரு நேர்காணலில் கூறி இருப்பார். இந்த நிலையில் கிருத்திகா காதல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி மாநில செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் ஓ கல் ஒரு கண்ணாடி, மனிதம், இது கதிர்வேலன் காதல், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அமைச்சரான பிறகு மாமனிதன் படத்துக்கு பின் வேறு திரைப்படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறி இருந்தார்.

இயக்குநர் கிருத்திகா
உதயநிதி ஸ்டாலினை போன்றே கிருத்திகா உதயநிதியும் திரைத்துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். மிர்ச்சி சிவா நடித்து உள்ள வணக்கம் சென்னை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தை அவர் இயக்கினார்.

தயாரிப்பாளர் கிருத்திகா
அந்த படத்தில் சமூக நீதி, சாதிய இழிவு தொடர்பாக அவர் பேசி இருப்பார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான காளிதாஸ் ஜெயராம் நடித்த பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸையும் அவர் இயக்கி உள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தையும் கிருத்திகாவே தலைமையேற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications