அதிமுக பாஜக இடையே "ரகசிய" கூட்டணி இருக்கு.. லோக்சபா தேர்தலுக்கு பின் பாருங்க! கொமதேக ஈஸ்வரன் தாக்கு
சென்னை: லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவித்த அக்கட்சி தலைவர் ஈஸ்வரன் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே கொமதேக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கொமதேக கட்சியின் தலைவர் ஈஸ்வரன், "லேக்சபா தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் என தேர்வு செய்ய விருப்பமனு பெற்றோம். அதன் தொடர்ச்சியாக நேர்காணல் நடத்தி. அதன் பின்னர் ஆட்சிமன்ற குழுவினரால் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொமதேகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். நாமக்கல் தொகுதியில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்., அனைவருமே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இந்த முறை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு தான் இந்தியா கூட்டணிக்கு வெற்றிக்கு முதல்படியாக அமையும். இந்தத் தேர்தலிலும் அப்படியே அமைய போகிறது.
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும் நாளை எதிர்பார்க்கிறோம்.. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க ஆட்சிக்கு வரக கூடாது என தீவிரமாக இருப்போம்.. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, பாஜக என தனித்தனியாக இருந்தாலும்.. அவர்கள் ஒறே கூட்டணி தான். அதிமுக பொதுசெயலாளர் இதுவரை பா.ஜ.க எதிர்த்து ஒரே ஒரு அறிக்கை கூட விடவில்லை .
தேர்தலுக்கு பிறகு வாய்ப்பு இருந்தால் அதிமுக நிச்சயம் பாஜகவை ஆதரிக்கும்.. அவர்கள் பெயரளவில் இரு கூட்டணியாக தனித்தனியாக இருந்தாலும் கூட எங்களுக்கு ஒரே எதிரி தான்" என்றார்.
-
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்!












Click it and Unblock the Notifications