ஊழல் வழக்கு.. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு.. நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை (அக்டோபர் 26) தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூபாய் 634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழ்நாடு டிஜிபிக்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.

KN Nehru Case

அந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி கடந்த திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது. அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை" என்று வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், கடந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை பாதுகாத்தது. வழக்குப் பதிவு செய்ய கோரிய வழக்கில், நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அந்த அவகாசத்தை பயன்படுத்தாமல், பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை என இந்த மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மனு மீது தலைமை நீதிபதி அமர்வு நாளை (அக்டோபர் 26 ஆம் தேதி) காலை தீர்ப்பளிக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+