போட்டு கொடுத்த சசிகலா- கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் வலது கரம் சேலம் இளங்கோவனிடம் விசாரணை?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமும் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2107-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் கொடநாடு எஸ்டேட் காவலர் ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலம் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து உயிரிந்தனர்.

தீவிரமான மறுவிசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மறு விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார், கனகராஜின் உறவினர்கள், கொடநாடு ஊழியர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

சசிகலாவிடம் விசாரணை
பின்னர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், ஆறுக்குட்டியின் தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன், அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவி ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் விசாரித்தது. மேலும் சென்னையில் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

போட்டுக் கொடுத்த சசிகலா?
2 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை சசிகலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடநாடு பங்காளவில் என்னென்ன இருந்தது? காணாமல் போன பொருட்கள் எவை? என 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர் தனிப்படை போலீசார். இதனடிப்படையில் தனிப்படை போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் இளங்கோவனிடம் விசாரணை?
இதன் முதல் கட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழன்னிசாமிக்கு மிக நெருக்கமான சேலம் இளங்கோவனை விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நிழல் முதல்வராக வலம் வந்தவர் சேலம் இளங்கோவன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications