கொத்து புரோட்டா பேச்செல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய்யை நம்பாமல் ஸ்டாலினிடம் ஓடும் கூட்டணி கட்சிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இடதுசாரி கட்சிகளிலும் திமுகவுடன் இணைந்து செல்வதில் பெரிய பிரச்சனை இல்லை என்ற மனநிலை இருக்கிறது. மு. வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதைப் பற்றி சிந்திக்கிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை பெற உதவ முடியும். அந்த வாக்குகளைப் பெற்றுத்தான் கூட்டணி கட்சிகளால் வெற்றி பெற முடிகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ரவீந்திரன் துரைசாமி, "காங்கிரஸில் உள்ள 9 எம்.பி.க்களில் சுமார் 6 பேர் திமுகவுடன் இணக்கமாக இருக்கிறார்கள். ஜோதிமணி, செல்வப்பெருந்தகை போன்றவர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். திமுகவுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸில் சிலர் நினைக்கிறார்கள். பிரியங்கா காந்தி தரப்பிலிருந்தும் திமுக எம்.பி.க்களிடம் இதுபோன்ற பேச்சுகள் போயிருப்பதாக தெரிகிறது.

Kothu Parotta

இடதுசாரி கட்சிகள் - திமுக

இடதுசாரி கட்சிகளிலும் திமுகவுடன் இணைந்து செல்வதில் பெரிய பிரச்சனை இல்லை என்ற மனநிலை இருக்கிறது. மு. வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதைப் பற்றி சிந்திக்கிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை பெற உதவ முடியும். அந்த வாக்குகளைப் பெற்றுத்தான் கூட்டணி கட்சிகளால் வெற்றி பெற முடிகிறது.

2004, 2009, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி கிடைக்க உதவியிருக்கிறார். 2019-ல் ஒரு தொகுதியில் வேட்பாளர் பிரச்சினையால் தோல்வி ஏற்பட்டது. 2024-ல் விசிகவுக்கு திமுக ஆதரவு இருந்ததால்தான் 2 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது.

விஜய்க்கு வந்த வாக்குகள்

விஜய்க்கு வந்த வாக்குகள் எல்லாமே ஒரே மாதிரியான வாக்குகள் கிடையாது. அவற்றை அப்படியே வேறு கூட்டணிக்கு மாற்ற முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

விஜய்க்கு வந்த வாக்குகளில் சுமார் 20 சதவீதம் ராகுல் காந்தி, திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கியிலிருந்து வந்திருக்கலாம். சுமார் 11 சதவீதம் மோடி, அண்ணாமலை சார்ந்த இந்து வாக்குகளாக இருக்கலாம். சீமானின் ஆதரவாளர்களிடமிருந்து சுமார் 4 சதவீதம் வாக்குகள் வந்திருக்கலாம். இவைதான் என்னுடைய கணிப்பு.

நவாஸ் கனி, திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸின் 6 எம்.பி.க்கள் போன்றவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இதுதான். விஜய்யால் இந்த வாக்குகளை வேறு கூட்டணிக்கு மாற்றிக் கொடுக்க முடியுமா? அதில் அவர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது.

திருமாவளவன், ராகுல் காந்தி

திருமாவளவனுக்கும் ராகுல் காந்திக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. டெல்லி அரசியலில் ராகுல் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், 2029-ல் ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பதா, விஜய்யுடன் செல்வதா என்று அவர்கள் யோசிக்கலாம்.

விஜய், "கொத்து புரோட்டா போட்டுவிட்டீர்கள்" என்று பேசுகிறார். எஸ்ஐஆரில் தோற்றுவிட்டார் என்பதுபோலத் தொடர்பில்லாமல் பேசுகிறார். ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி திரும்ப திரும்ப பேசுவது திமுக கூட்டணியை நோக்கிய நகர்வுதான். விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். விஜய்யை நம்பி, விஜய்க்கு விழுந்த மோடி பிரதமராக வேண்டும் என்ற இந்து வாக்குகள் தங்களுக்கு மாறி கிடைக்காது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

சிலர் தவெகவை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு, திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்பதற்கும் முயற்சி செய்யலாம். ஜோதிமணி உள்ளிட்டவர்கள் ஸ்டாலினை அணுகுவதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக பக்கம் செல்வதாகவும் தெரிகிறது.

கொத்து புரோட்டா

மதுராந்தகம், கோயம்புத்தூர், தாராபுரம் போன்ற இடங்களில் விஜய்யால் எதிர்பார்த்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய முடியவில்லை. ஒரு தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் நிரந்தரமாக அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

விஜய் ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்தித்து 140 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், அந்த வாக்குகள் நிரந்தரமான வாக்குகளாக மாறியிருக்கலாம். ஆனால் மக்களவைத் தேர்தல் என்று வரும்போது அந்த வாக்குகள் மோடி, ராகுல் காந்தி, சீமான் எனப் பிரிய வாய்ப்பிருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் திருமாவளவன் மீது திமுக தொண்டர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. காங்கிரஸை நம்ப முடியாது என்ற எண்ணமும் இருக்கிறது. 2029-ல் திமுகவுடன் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, 2031 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் வேறு முடிவெடுத்தால் என்ன செய்வது என்ற கேள்வி திமுகவுக்கு இருக்கிறது.

இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கின்றன. கூட்டணி கட்சிகள் இப்போதே இறுதி முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்தகட்ட அரசியல் சூழலைப் பார்த்துத்தான் முடிவு செய்வார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+