சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவரா போனார்..இருக்காது! கோவை செல்வராஜ் முடிவால் ஷாக் ஆன ஓபிஎஸ்! எப்படியெல்லாம் எடப்பாடியை பேசினார்?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எதிரான அதிகார யுத்தத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தளபதிகளில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அவர் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக கோவை செல்வராஜ் விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையேயான அதிகார போதலில் பலரும் பல அணிகளுக்குத் தாவினர் கடந்த ஆண்டுகளில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த பலர் எடப்பாடி தரப்புக்கு தாவி நிலையில் ஆதரவாக இருந்த சிலர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினர்.

அந்த வகையில் கேபி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி தரப்புக்கு தாவிய நிலையில் கோவை செல்வராஜ், வெள்ளமண்டி நடராஜன், கன்னியாகுமரி அசோகன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினர்.

ஓபிஎஸ்சுக்கு பெரிய அடி.. ஓபிஎஸ்சுக்கு பெரிய அடி.. "கட்சியை விட்டே போறேன்.." பன்னீருக்கு கல்தா கொடுத்த கோவை செல்வராஜ்!

கோவை செல்வராஜ்

கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் தரப்பில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் முக்கியமானவர்களில் மூவர் இருந்தனர். அவர்களை அதிமுகவின் திரிசூலம் என்றே ஓபிஎஸ் தரப்பு அழைத்து வந்தது. அந்த வகையில் வைத்தியலிங்கம், பெங்களூர் புகழேந்தி, கோவை செல்வராஜ் ஆகியோர் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தார். ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமி தரப்பையும் அவர் ஆதரவு முன்னாள் அமைச்சர்களையும் விலாசி எடுப்பதில் கோவை செல்வராஜ்க்கு நிகர் அவரே தான்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதா மரணத்திற்கு எடப்பாடி தரப்பு தான் காரணம் என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் தான் ஓபிஎஸ் தரப்பில் இருந்து விலகுவதாகவும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓ பன்னீர்செல்வம் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவது மத்தியில் இருக்க விரும்பவில்லை என அறிவித்திருப்பது ஓ பன்னீர்செல்வம் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

மகிழ்ச்சியில் எடப்பாடி

மகிழ்ச்சியில் எடப்பாடி

ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் கோவை செல்வராஜ் விலகுவது எடப்பாடி தரப்பை நிச்சயம் மகிழ்ச்சியில் தான் ஆழ்த்தும். காரணம் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர் கோவை செல்வராஜ். கடந்த காலங்களில் ஓபிஎஸ் தரப்பின் கொள்கை பரப்பு செயலாளர் போலவே இருந்து வந்தவர் கோவை செல்வராஜ். ஓ.பன்னீர்செல்வம் தான் உண்மையான அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலையில மேலான அதிமுக பட்டா இல்லாத பொறம்போக்கு நிலம்போல இருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி கம்பனி போல் நடத்த முயற்சிக்கிறார் எனக் கூறியிருந்தார்.

அரசியலில் பரபரப்பு

அரசியலில் பரபரப்பு

அது மட்டும் அல்லாமல் துரோகத்தின் முழு உருவமே எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் ஜெயலலிதா மறைவுக்கு அப்போது அமைச்சராக இருந்தவர்களை காரணம் எனவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது மட்டும் அல்லாமல் சசிகலாவுடன் இணைவதற்கு ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்ததாக கூறி அப்போதைக்கு அரசியல் பரபரப்பை பற்ற வைத்தவர். இப்படி ஓபிஎஸ்.க்கு உறுதுணையாகவும் எடப்பாடிக்கு எதிராகவும் இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரப்பரப்பை பற்ற வைத்திருக்கிறது. எடப்பாடி விமர்சித்ததால் இனி தனக்கு அதிமுகவில் எதிர்காலம் இருக்காது ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் குறிப்பிடத்தக்கந்த வெற்றி கிடைக்காது என்பதால்தான் கோவை செல்வராஜ் விலகி இருப்பதாக கூறுகின்றனர் கோவை அதிமுக நிர்வாகிகள்.

English summary
covai Selvaraj, who was one of the key administrators in the generals who supported O. Panneerselvam in the power struggle against Edappadi Palaniswami over the issue of single leadership in the AIADMK, has announced that he is leaving his team and the AIADMK, which has shocked his side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X