சென்னை டூ கிருஷ்ணகிரி.. ஒரே நாளில் எகிறியடிக்கும் திமுக.. அறிவாலயம் ஆச்சரிய பிளான்.. அதிரும் தமிழகம்
சென்னை: சென்னையில் இன்று, 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக மாவட்டங்களில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.
விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேபோல, கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி உள்ளன.

தமிழகத்தில் எந்த கூட்டணியும் இதுவரை உறுதியாகவில்லை. ஆனால், பலமான கூட்டணியாக திமுக இப்போதும் உள்ளது.. கடந்த முறை அமைந்த கூட்டணியே, இப்போதும் தொடர போவதாக தெரிகிறது. இந்த கூட்டணியிலேயே மேலும் சில கட்சிகள் புதிதாக இணையவிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் வருகை எதிர்நோக்கப்பட்டு வருகிறது.
கூட்டணிகள்: இதுஒருபுறம் இருந்தாலும், சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள், கடந்த முறையைவிட அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், கூட்டணிகளுக்கு தாராளமாக தொகுதிகளை ஒதுக்கும் முடிவில், திமுக இல்லை என்றே தெரிகிறது.
இதுஒருபுறம் இருந்தாலும், திமுகவின் களப்பணிகள் மும்முரமாகி உள்ளன.. திமுகவுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது..
திமுக கூட்டம்: இந்நிலையில்தான், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு உள்பட பல்வேறு விவகாரங்களுக்கு திமுக பிரத்யேகமாகவே குழு அமைத்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்திருக்கிறது. இதற்கான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக ஜனவரி 24ம் தேதி (இன்று) முதல் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி 24ம் தேதி கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், 27ம் தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.
மதுரை: பிப்ரவரி 28ம் தேதி நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி திமுக நிர்வாகிகளுடனும், 29ம் தேதி சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி திமுக நிர்வாகிகளுடனும், வரும் 30ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெற உள்ளது.
அதன்பிறகு வரும் 31ம் தேதி ராமநாதபுரம், கடலூர் திமுக நிர்வாகிகள் கூட்டமும், பிப்ரவரி 1ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், பிப்ரவரி 2ம் தேதி வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீ பெரும்புதூர் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது.
நிர்வாகிகள்: மேலும் பிப்ரவரி 4ம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் , பிப்ரவரி 5ல் கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முதல்கூட்டமே கிருஷ்ணகிரி, திருவள்ளர் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications