ஹேங்கர், ஸ்விட்ச் போர்டு.. ரகசிய கேமரா.. அதிர வைக்கும் ஆதம்பாக்கம் லேடீஸ் ஹாஸ்டல்.. கொடூரன் கைது!
Recommended Video

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அதன் உரிமையாளர் சஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ளது தனியார் பெண்கள் விடுதி. இங்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்த விடுதியை திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவி நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் அவ்வப்போது அவர்களது அறைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இது போல் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகளால் பெண்கள் குழப்பமடைந்தனர்.

செயலி
இதையடுத்து அறையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதை கண்டறிவதற்காக தங்கள் செல்போன்களில் இருந்து Hidden Camera Detector என்ற செயலியை டவுன்லோடு செய்துள்ளார்கள்.

போலீஸிடம் புகார்
அந்த செயலி மூலம் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியபோது அங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆதம்பாக்கத்தில் புகார் அளித்தனர்.

பொருத்தம்
போலீஸார் சோதனை நடத்தியதில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில், ஸ்விட்ச் போர்டு, உடைகளை வைக்கும் ஆங்கர்கள், மின் விளக்குகள் ஆகிய இடங்களில் கண்ணுக்கு தெரியாத அளவு கொண்ட ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

16 செல்போன்கள் பறிமுதல்
இதையடுத்து விடுதி உரிமையாளர் சஞ்சீவியை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ரகசிய கேமராக்கள், போலி ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆபாச வலைதளங்கள்
இந்த கேமராக்கள் எப்போது பொருத்தப்பட்டன. சஞ்சீவியின் பின்புலத்தில் வேறு ஏதும் குரூப்கள் செயல்படுகின்றனரவா, இது வரை படம்பிடிக்கப்பட்ட பெண்களின் அந்தரங்கங்கள் ஆபாச தளங்கில் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்பட்டனவா உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications