விஜய் அறிவித்த 2 பேர் வேட்பு மனுவே தாக்கல் பண்ணல.. கடைசி நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்த வேட்பாளர்களில் இருவர் வேட்புமனுவே தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஊத்தங்கரை மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் அறிவித்த குமரவேல் மற்றும் அம்ரிஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதற்கு பதிலாக ஊத்தங்கரையில் இளையராஜாவும், ஓசூரில் வேந்தர்கரசனும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனு நேற்றோடு முடிவடைந்த நிலையில் விஜய் வேட்பாளராக அறிவித்த இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது தெரியந்துள்ளது.

அதாவது சென்னையில் நடந்த தவெக வேட்பாளர்கள் அறிமுக விழாவின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் விஜய் வேட்பாளர்கள் அறிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதி தவெக வேட்பாளராக குமரவேல் அறிவிக்கப்பட்டார். நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் அவருக்கு பதிலாக இளையராஜா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த இளையராஜா தவெகவில் இணைந்தார். இதையடுத்து ஊத்தங்கரை தொகுதி வேட்பாளராக இருந்த குமரவேல் மாற்றப்பட்டு இளையராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளராக முதலில் அறிவித்துவிட்டு கடைசியில் வேட்பாளர் மாற்றப்பட்ட நிலையில், குமரவேலும் நேற்று சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதேபோன்று ஓசூர் தொகுதி வேட்பாளராக தவெக சார்பில் விஜய்யால் அறிவிக்கப்பட்டிருந்த அம்ரீசும் மாற்றப்பட்டுள்ளர். அம்ரீசுக்கு பதில் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள வடிவேல் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
வடிவேல் நேற்று ஒசூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்ரிதி சேத்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கடைசி நேரத்தில் இரண்டு வேட்பாளர்களை தவெக மாற்றியிருக்கிறது. வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை இன்று நடந்து வருகிறது. இதில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோன்று புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்!











Click it and Unblock the Notifications