விலைவாசி உயர்வு பற்றி கருத்து சொன்னதால் பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார வல்லுநர் கலையரசன் நேற்று அதிகாலையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு, இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கருத்து சொன்னதற்காக பேராசிரியர் கலையரசனை துன்புறுத்துவதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வரும் பொருளாதார வல்லுநரான சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசனை, அவரது வீட்டில் இருந்து நேற்று அதிகாலையில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Kalaiyarasan

சமீபத்தில், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பொருளாதார வல்லுநர் கலையரசன், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்திருந்தார். குறிப்பாக, தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள கலையரசனின் வீட்டுக்கு சாதாரண உடையில் 3 போலீசார் சென்றுள்ளனர். வீட்டின் கதவைத் திறந்த கலையரசனிடம் பெயரைக் கேட்ட போலீசார், பின்னர் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். எந்த வழக்கு, என்ன புகார் என்ற விவரங்களை கலையரசனிடம் போலீசார் முதலில் தெரிவிக்கவில்லை.

பின்னர்தான், பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து பதிவிட்டதாகக் கூறி கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார்.

நீண்ட நேரம் கழித்து, கலையரசனை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டுள்ளனர். இதையடுத்து, தன்னை போலீசார் துன்புறுத்தியதாக தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார் கலையரசன். இந்நிலையில், கலையரசன் மீதான இந்த அத்துமீறலுக்கு இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"பேராசிரியர் கலையரசன் விலைவாசி உயர்வு குறித்து கருத்து சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. காவல்துறை அவர்களை அணுகும் விதம் என்பது ஏற்புதையது அல்ல." என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், "சென்னை வளர்ச்சி மையம் (MIDS) பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சீருடை அணியாத காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

நள்ளிரவு கைது, விடியற்காலை கைது என்பதெல்லாம் காவல்துறை ராஜ்ஜியம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் இருந்தால் முறையாக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+