ஞானேஷ் குமார் பதவி விலக கோரி சென்னையில் இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பு போராட்டம்.. கைது செய்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சென்னையில் இடதுசாரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக 24 மணி நேரம் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று ஓட்டு திருடர், சீட்டிங் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்..

போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் இளைஞர்களை கைது செய்தனர். எங்களை கைது செய்தாலும் போலீசார் அடைத்து வைத்தாலும் மண்டபத்தில் போராட்டம் தொடரும் எனவும்,
ஒன்றிய அரசுக்கும், அமித்ஷாவுக்கும் சிஎம் விஜய் அரசு பயப்படக் கூடாது என இடதுசாரி இளைஞர்கள் கூறினர்.

Gyanesh Kumar

சென்னையில் மாணவர்கள் போராட்டம்

எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியில் டெல்லியில் போராட்டம் நடத்திய நிலையில் இதற்கு இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் இடதுசாரி மாணவர்கள் அமைப்பு சார்பில் இன்று சென்னையில் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி 24 மணி நேர தொடர் போராட்டம் நடத்தினர்.

சென்னை எழும்பூரில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, போலீசார் இதற்கு அனுமதி மறுத்ததோடு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்களை கைது செய்தனர்.

விஜய் அரசு பயப்பட கூடாது

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏ.ஐ.எஸ்.எஃப் அகில இந்திய பொதுச் செயலாளர் தினேஷ் ஸ்ரீரங்கராஜ், ஒன்றிய அரசுக்கும், அமித்ஷாவுக்கும் சிஎம் விஜய் அரசு பயப்படக் கூடாது என்று கூறினார். அவர் கூறியதாவது:-

ஓட்டு திருடர்.. சீட்டிங் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.. ஆனால் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுப்பதற்கு இவ்ளோ பயப்படுகிறார்கள். ஒன்றிய அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சிஎம் விஜய் அரசு பயப்படக் கூடாது..

ஓட்டு திருடர் ஞானேஷ் குமார்

ஏனென்றால், விடுதலை போராட்டத்தில் இருந்து தமிழ்நாடு மிக முக்கிய இடத்தை வகித்து உள்ளோம். மாநில உரிமைக்கான போராட்டத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளோம். ஆனால் இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டுடைய குரலை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது தமிழக அரசு போராடக்கூடிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உறுதுணையாக இருக்கனும்.

நாங்க யாருக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கோம்.. ஒன்றிய அரசு 13 கோடி வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறித்து உள்ளது. ஓட்டுத் திருடருக்கு எதிராக போராட்டம் நடத்துறோம். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துறோம். எனவே எங்கள் போராட்டத்துக்கு அனுமதி கொடுப்பது மாநில அரசின் கடமை.. கேரளாவில் ஏஎஸ்.எஃப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. தமிழக அரசும் இதை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+