வீட்டு லோன் எடுத்து.. இஎம்ஐ கட்டுறீங்களா? உங்களுக்கு இதைவிட பெரிய குட்நியூஸ் வராது.. செம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வங்கிகளின் வட்டி விகிதக் குறைப்புகளைத் தொடர்ந்து, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய கொள்கை நடவடிக்கையைத் தொடர்ந்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இத்தகைய வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன. எல்ஐசி இனிமேல் அதன் வாடிக்கையாளர்களுக்கு 8% தொடக்க விகிதத்தில் கடன்களை வழங்குகிறது, இது ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வரும்.

வீட்டுக் கடன் கணக்கீடுகள்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் அதன் கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததால். 20 ஆண்டுகளுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் எடுக்கப்பட்ட ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான ஃப்ளோட்டிங் ரேட் வீட்டுக் கடன்களுக்கான திருத்தப்பட்ட இஎம்ஐகள் என்னவாக இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

LIC change the EMI and Tenure as the RBI makes Repo Rate changes

ரூ.30 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 28,950.65
இப்போது (9.75% வீதத்தில்)- ரூ 28,455.51

ரூ.40 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 38,600.87
இப்போது (9.75% வீதத்தில்)- ரூ 37,940.67

ரூ.50 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 48,251.08
இப்போது (9.75% விகிதத்தில்)- ரூ 47,425.84

ரூ.60 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 57,901.30
இப்போது (9.75% விகிதத்தில்)- ரூ 56,911.01

ரூ.70 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 67,551.52
இப்போது (9.75% விகிதத்தில்)- ரூ 66,396.18

ரூ.80 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 77,201.73
இப்போது (9.75% வீதத்தில்)- ரூ 75,881.35

ரூ.90 லட்சம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 86,851.95
இப்போது (9.75% விகிதத்தில்)- ரூ 85,366.52

ரூ.1 கோடி எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் இஎம்ஐ
முந்தைய (10% விகிதத்தில்)- ரூ 96,502.16
இப்போது (9.75% விகிதத்தில்)- ரூ 94,851.69

வட்டி மாற்றம்

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல முன்னணி பொதுத்துறை வங்கிகள், அவற்றின் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை (RBLR) அதற்கேற்ப மாற்றி அமைத்துள்ளன.

இந்த மாற்றம் மூலம் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன்கள் குறைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு வங்கிகளில் குறைக்கப்பட்ட வீட்டு கடன் மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.

SBI முந்தைய வட்டி விகிதம் 9.15%, புதிய வட்டி விகிதம் 8.80%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,609, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹976

HDFC வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.25%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945

ஐசிஐசிஐ வங்கி முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.85%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,712, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹958

பாங்க் ஆஃப் பரோடா முந்தைய வட்டி விகிதம் 9.10% , புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983

Axis Bank முந்தைய வட்டி விகிதம் 9.30% , புதிய வட்டி விகிதம் 8.95%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,919, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹933

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945

Kotak Mahindra வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.35%, புதிய வட்டி விகிதம் 9.00%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹46,022, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹910

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முந்தைய வட்டி விகிதம் 9.10%, புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+