2 மாடிக்கு மேலுள்ள கட்டிடங்களுக்கு லிப்ட் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி.. ஏற்கனவே கட்டியவர்கள் நிலை?
சென்னை: புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் 2 மாடிக்கு மேல் இருந்தால் மின்தூக்கி (லிப்ட்) உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் என்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று, வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான, லிஃப்ட் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லிஃப்ட் கட்டாயம்
இதோ விவரம்: புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மின்தூக்கி (லிஃப்ட்) உட்பட வசதிகள் கட்டப்பட வேண்டியது கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்து இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் வசதி
பொதுவான கட்டடங்கள், போக்குவரத்து ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லாத உட்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமென்பது தான் மாற்றுத்திறனாளிகள் உரிமையாக சட்டம் வரையறுக்கிறது. அதன் அடிப்படையில்தான் புதிதாக கட்டப்படும், இரண்டு அடுக்கிற்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட அனைத்து கட்டிடங்களிலும்,மின் தூக்கிகள் சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவித்து இருக்கிறது.

பழைய கட்டிடங்களுக்கு விதிமுறை பொருந்தாது
புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் எனக் குறிப்பிட்டுள்ளதால், ஏற்கனவே 2 மாடிகளுக்கு மேல் உள்ள பில்டிங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. எனவே ஏற்கனவே கட்டிடங்கள் கட்டியோருக்கு லிப்ட் வசதி கட்டாயம் கிடையாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் லிப்ட் அமைக்க சில லட்சங்களாவது செலவு பிடிக்கும். குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்கிறார்கள்.

குடியிருப்பு திட்டங்கள்
இதேபோல, தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.950 கோடி செலவில் இந்த குடியிருப்புகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ,தேனி, தென்காசி திண்டுக்கல், சேலம் ,நாமக்கல் மாவட்டங்களில் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

உலக வங்கி உதவி
உலக வங்கி நிதி உடன் இந்த 6000 குடியிருப்புகள் அமைக்கப்படும் என்று வீட்டு வசதி வாரியம் தனது கொள்கை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications