சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோப்பம் பிடித்த உளவுத்துறை! பறந்த "ஸ்வீட்" நியூஸ்.. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் செய்யாமல் ஆன்லைன் பிரச்சாரம் செய்வதற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் ஒன்றும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வழியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

நேரடி பிரச்சாரம்

நேரடி பிரச்சாரம்

இதில் எதிர்கட்சித் தலைவர் நேரடி பிரச்சாரம் செய்தாலும் ஆளும் கட்சியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்களை தவிர வேறு யாரும் நேரடி பிரச்சாரம் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலினும் நேரடி பிரச்சாரம் செய்யவில்லை. நேரடி பிரச்சாரம் செல்லவே ஸ்டாலின் விரும்பியிருந்த நிலையில், "உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு 90 சதவீத வெற்றி உறுதி " என்று மாநில உளவுத்துறைக் கொடுத்த சர்வே ரிப்போர்ட்டால், நேரடி பிரச்சாரத்தை தவிர்த்திருக்கிறார் ஸ்டாலின். மோப்பம் பிடித்த உளவுத்துறை! பறந்த "ஸ்வீட்" நியூஸ்.. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

அதாவது வெற்றி உறுதி என்று உளவுத்துறை அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், மக்களுக்கு நேரடியாகவும், உடனடியாகவும் பலனைக் கொடுக்கக்கூடிய முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அவர்களின் கோபம் ஸ்டாலினின் நேரடி பிரச்சாரத்தில் எதிரொலித்தால் அது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதாலும் நேரடி பிரச்சாரத்தை தவிர்த்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக பிளான்

அதிமுக பிளான்

அதாவது, மக்களிடமிருந்து அத்தகைய குரல்கள் வருகிறதோ இல்லையோ ஸ்டாலினின் நேரடி பிரச்சார கூட்டத்தில் அதிமுக மகளிர் அணியை சேர்ந்தவர்களை களமிறக்கி, 'வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?' என குரல் கொடுக்க வைக்க அதிமுக மா.செ.க்கள் திட்டமிடக்கூடும் என்பதையும் உளவுத்துறையினர் மோப்பம் பிடித்தனர். இதனையும் முதல்வருக்கு சொல்லப்பட்ட நிலையில், நேரடி பிரச்சாரத்தை தவிர்த்தார் ஸ்டாலின் என்று சுட்டிக்காட்டுகின்றன உளவு வட்டாரங்கள்.

தயக்கம்

தயக்கம்

90 சதவீத வெற்றி திமுகவுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கள நிலவரம் திமுகவுக்கு சற்று எதிர்மறையாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்து வருகிறதாம். இதனை எப்படி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்கிற தயக்கம் அவர்களிடம் இருக்கிறதாம்.

எங்கே வீக்

எங்கே வீக்

எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவுக்கு வீக் என தகவல் கிடைத்துள்ளதோ அதனை சரி செய்யுமாறு திமுக அமைச்சர்களிடம் தகவலை பாஸ் செய்து உள்ளனராம் உளவுப்பிரிவினர். இதனால் இங்கே மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இப்போதே வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, 90 சதவீத வெற்றி என ரிப்போர்ட் தந்திருப்பதால் அதனை மெய்ப்பிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள் மாநில உளவுத்துறையினர் என்று அரசு தரப்பு தவளைகள் வருகின்றன.

English summary
Local Body Election: Why CM M K Stalin is not doing an offline door to door campaign? What is the reason?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X