ஸ்பீக்கர்ல பாட்டு, சத்தமா போன் கால்.. இனி இது நடந்தா ஜெயிலுதான்.. தெற்கு ரயில்வே போட்ட ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் ஜாலியாக பயணம் செய்யும்போது செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது என பொழுதைக் கழிப்பது பலருக்கும் வழக்கமாக இருக்கும்.. சிலர் ஹெட்போன் போட்டுக் கேட்பார்கள். இன்னும் சிலரோ செல்போனில் ஸ்பீக்கரிலேயே சத்தமாக பாட்டு கேட்பார்கள், வீடியோ பார்ப்பார்கள். ஆனால், இதனால் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால் இனி பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்... அபராதம் மட்டுமல்ல, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ரயிலில் பயணம் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவை இருக்கும். சிலர் ஓய்வெடுப்பார்கள், சிலர் தூங்குவார்கள், இன்னும் சிலர் புத்தகம் படிப்பார்கள். இந்த நேரத்தில் அருகிலிருப்பவர், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ, வீடியோ பார்த்தாலோ மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுவது இயல்புதான்.

Southern Railway

ஸ்பீக்கரில் பாட்டு

அடுத்தவர்களை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், தாங்கள் செல்போனில் ஜாலியாக இருப்பதையே சிலர் குறிக்கோளாக கொண்டிருப்பார்கள்.

குறிப்பாக, நீண்ட தூர ரயில்களில் இரவு நேர பயணத்தின்போது இதுபோன்ற சத்தங்கள் மற்ற பயணிகளின் தூக்கத்தையும் நிம்மதியையும் பாதிக்கலாம்... அதனால்தான் இதுபோன்ற தொந்தரவுகளைத் தடுக்க தெற்கு ரயில்வே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ரயிலில் சத்தமாக வீடியோ

ரயிலில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம். தொடர்ந்து தொந்தரவு கொடுப்பவர்களை ரயில் பெட்டியிலிருந்தோ, ரயில் நிலையத்திலிருந்தோ வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ரயில்வே சட்டத்தின் 145-வது பிரிவு, தொந்தரவு ஏற்படுத்தும் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது.

இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப ரூ.5000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், எந்த செயலுக்கு எந்தத் தண்டனை பொருந்தும் என்பது சம்பவத்தின் தன்மை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளைப் பொறுத்தது.

ஹெட்போன் பயன்படுத்துங்க

இதற்காக ரயிலில் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்று அர்த்தமில்லை. செல்போனில் பாட்டு கேட்க வேண்டும், வீடியோ பார்க்க வேண்டும் என்றால் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்தலாம். அதேபோல், சத்தமாக பேசும் செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க வேண்டும்.

இதுதொடர்பாக ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்தப் பகுதிகளின் உள்ளூர் மொழிகளில் அறிவிப்புகள் இடம்பெறும். பயணிகள் ஹெட்போன் பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேசுவது போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

டிக்கெட் பரிசோதகர்கள்

ரயிலில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் வணிகப் பிரிவின் மூத்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.. அதாவது, சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்..

மற்ற பயணிகளுக்கு தொந்தரவு செய்தால், அவர்களுக்கு அபராதம் விதிப்பதும், தேவையான சூழலில் அவர்களை ரயில் பெட்டியிலிருந்து வெளியேற்றுவதும் என பல விதிமுறைகள் இப்போதும் உள்ளன.. ஆனால், செல்போன்களில் சத்தமாகப் பாடல்கள் கேட்பது, வீடியோக்களைப் பார்ப்பது போன்ற செயல்களால் ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்தவும் கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ரயில் பயணிகள் அலர்ட்

ரயில் என்பது ஒருவருக்கான இடம் மட்டுமே கிடையாது... பலரும் சேர்ந்து பயணம் செய்யும் பொதுவான இடம். அதனால், நமக்குப் பிடித்த பாடலைக் கேட்பதற்காக மற்றவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டியதில்லை. ஹெட்போன் பயன்படுத்துவது, செல்போனில் சத்தத்தை கம்மி செய்வது, நைட் நேரங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது இப்படி எளிய விஷயங்களை கடைப்பிடித்தாலே, பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+