காதல் முதல் விவாகரத்து வாபஸ் வரை! இனியாவது விஜய்- சங்கீதா சேர்ந்து வாழ்வார்களா?
சென்னை: காதல் முதல் விவாகரத்து மனு வாபஸ் வரை விஜய்- சங்கீதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பார்க்கலாம். விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சங்கீதா தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு மனைவி சங்கீதா, லண்டனில் இருந்தபடியே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனது கணவர் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வதாகவும், அவ்வாறு செல்லும் போது இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படத்தை அந்த நடிகை தனது சோசியல் பக்கத்தில் பதிவிடுவதால் தனது பிள்ளைகளுக்கு அது அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
தனக்கு குடும்ப செலவிற்குக் கூட விஜய் பணம் கொடுப்பதில்லை என்றும், காரை பயன்படுத்தக் கூட அனுமதி இல்லை என்றார். தான் லண்டன் பிரஜை என்பதால் தனக்கு இந்தியாவில் சொந்த வீடு இல்லை. எனவே வழக்கு நடைபெறும் வரை தான் இந்தியா வந்தால் அவரது நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கால் விஜய் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் விஜய் எப்படியோ போட்டியிட்டு வென்றுவிட்டார். இந்த நிலையில் ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜய்யும் சங்கீதாவும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. ஆன்லைனில் வீடியோ காலில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம் சங்கீதா, தான் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறினாராம். இதை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் விஜய்- சங்கீதாவின் காதல் கதை முதல் அவர்கள் பிரிந்திருந்தது வரை எல்லாவற்றையும் பார்க்கலாம். இலங்கை தமிழ் தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகள் சங்கீதா. இவர் லண்டனில் வசித்து வருகிறார்.
இவர் விஜய்யின் தீவிர ரசிகை, 1996ஆம் ஆண்டு பூவே உனக்காக படத்தை பார்த்ததும் சென்னைக்கு வந்து எப்படியாவது விஜய்யை பார்க்க விரும்பினாராம். மேலும் ஒரு படத்தின் படப்பிடிப்புச் சென்ற சங்கீதா, விஜய்யின் நடிப்பை பாராட்டினாராம். அப்போது விஜய்க்கும் சங்கீதாவின் எளிமை மிகவும் பிடித்திருந்ததாம்.
இதையடுத்து ஒரு முறை தனது பெற்றோரை வந்து பார்க்குமாறு விஜய் அழைத்தாராம். அதன் பேரில் சங்கீதாவும் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபாவை நேரில் சந்தித்தாராம். அப்போது விஜய்யின் பெற்றோருக்கும் சங்கீதாவை பிடித்து விட்டதாம். இதனால் முறைபடி சங்கீதாவின் பெற்றோரிடம் விஜய்யின் பெற்றோர் பெண் கேட்டனர்.
இதையடுத்து கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி விஜய்யும் சங்கீதாவும் தங்கள் திருமணத்தை லண்டனில் பதிவு செய்தனர். பின்னர் அடுத்த ஆண்டு 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்து முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து ராஜா முத்தையா மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா. 26 வயதாகும் சஞ்சய், குழந்தை நட்சத்திரமாக வேட்டைக்காரன் படத்தில் "நான் அடிச்சா.." பாடலில் நடித்திருந்தார்.
அது போல் 2005-ஆம் ஆண்டு பிறந்த மகள் திவ்யாவும் தெரி படத்தில் கடைசி சீனில் நடித்திருந்தார். ஜேசன் இயக்குநராகியிருக்கிறார். திவ்யா, லண்டனில் படித்து பட்டம் பெற்றுள்ளார். விஜய் விவாகரத்து விவகாரம் வந்த போது விஜய் தனது குழந்தைகளை கவனிப்பதில்லை, குழந்தைகளுக்கும் தந்தையை பிடிக்கவில்லை என்றெல்லாம் பேசினர்.
ஆனால் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்த சஞ்சய், தனது தந்தை குறித்து நல்லவிதமாகவே கருத்து தெரிவித்திருந்தார். இதனால் தந்தை- மகன் உறவில் எந்த விரிசலும் இல்லை என தெரியவந்தது. அது போல் திரிஷாவும் , தனக்கு சங்கீதாவை மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றுக் கொண்டார். இனி விஜய்யுடன் சேர்ந்து வாழ்வாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
