சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க சென்றபோது, கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த கோட்டூர்புரம் விநாயர் கோவில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

"உளமார" உறுதியேற்கிறேன்.. அழுத்தம் திருத்தமாக அடித்து சொல்லி பதவியேற்ற திமுக அமைச்சரவை.. செம சம்பவம்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சொல்லி வைத்து அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இதனை தொடந்து புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

எளிய முறையில் பதவியேற்பு

எளிய முறையில் பதவியேற்பு

இதற்காக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்த பதவியேற்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி காரில் புறப்பட்டு சென்றார்.

விநாயகர் கோவிலில் மரியாதை

விநாயகர் கோவிலில் மரியாதை

அவர் செல்லும் வழியில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் கோட்டூர்புரம் அருகே சென்றபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு ஸ்டாலினின் கார் சிறிது நேரம் நின்றது. கோட்டூர்புரம் விநாயகர் கோவில் சார்பில் ஸ்டாலினுக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்டாலின் அங்கு இருந்து பதவியேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.

ஜெயலலிதாவுக்கு பிடித்தமான கோவில்

ஜெயலலிதாவுக்கு பிடித்தமான கோவில்

இந்த கோட்டூர்புரம் விநாயர் கோவில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவிலாகும். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது கோட்டைக்கு செல்லும்போது இந்த கோவிலில் முன்பு காரை நிறுத்தி வழிபட்டு செல்வார். ஜெயலலிதா ஆட்சியில் இல்லாவிட்டாலும் அந்த விநாயகர் கோவிலில் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விநாயகர் கோவிலில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
When Stalin took over as the Chief Minister of Tamil Nadu, he was honored at the Kotturpuram Ganesha Temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X