மாஃபியா போல செயல்படும் மணல் கொள்ளையர்கள்.. பத்திரிக்கையாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாகவும், மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதனை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடையும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீதிபதிகள் எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது?உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். ஐந்து கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக கனிம வளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது ? எனவும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாக கூறினர்.
மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக புகாரளிக்காத வருவாய் துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவில் கூறியுள்ளனர். மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அறிக்கை ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுக்க திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications