இதுக்கும் மதுரைதான் “பேமஸ்”.. உலகின் சிறந்த 25 கண் ஆய்வாளர்கள்! “லிஸ்டில்” 4 மதுரை மருத்துவர்கள்
சென்னை: உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்போர்ட் வெளியிட்டு இருக்கும் சிறந்த 2% கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் மதுரை அர்விந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் அமைந்து இருக்கும் உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஸ்டான்ஃபோர்ட். இந்த பல்கலைக்கழகம் அண்மையில் ஒரு தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
2021 ஆண்டுக்கான உலக கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் தலைசிறந்து விளங்கும் 2 சதவீதம் பேரின் தரவரிசை பட்டியல்தான் அது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்களும் இடம்பெற்று இருக்கின்றனர்.

முதல் 6
ஸ்டான்போர்ட் வெளியிட்ட அந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் சந்தோஷ் ஹொனவர், 2 வது இடத்தில் பிலிப் தாமஸ் ஆகியோரும் 3 வது இடத்தில் விரேந்தர் சங்வான், 4 வது இடத்தில் ரோகித் ஷெட்டி, 5 வது இடத்தில் முத்தையா ஸ்ரீனிவாசன், 6 வது இடத்தில் மருத்துவர் முஹம்மது ஜாவித் அலி ஆகியோரும் இடம்பிடித்து இருக்கின்றனர்.

இந்தியர்கள் அதிகம்
7 வது இடத்தில் சாவித்ரி ஷர்மா, 8 வது இடத்தில் அமோத் குப்தா, 9 வது இடத்தில் விஷாலி குப்தா, 10 வது இடத்தில் மருத்துவர் வினோத் குமார் ஆகியோரும் 11 வது இடத்தில் நம்ரதா ஷர்மா, 12 வது இடத்தில் பிரஷாந்த் கார்க், 13 வது இடத்தில் ஜில் கீஃபீ, 14 வது இடத்தில் குல்லபல்லி ராவ் ஆகியோரும் இடம்பிடித்து உள்ளார்கள்.

மதுரை மருத்துவர்கள்
15 வது இடத்தில் சுவாதி கலிகி, 16 வது இடத்தில் ரோகித் கன்னா, 17 வது இடத்தில் லலிதா பிராசன்னா, 18 வது இடத்தில் ரத்தினம் சிவக்குமார், 19 வது இடத்தில் ஜோதிர்மே பிஸ்வாஸ், 20 வது இடத்தில் மிட்டனமல்லி ஸ்ரீதர், 21 அக்ஷய் கோபிநாதன் நாயர், 22ல் ராஜீவ் ராமன், 23ல் வெங்கடேஷ் பிரச்சன்னா, 24ல் சூசன் ஜேக்கப், 25ல் ரோகித் சக்சேனா ஆகியோர் உள்ளனர்.

மதுரை கண் மருத்துவமனை
இதில் ஏராளமான இந்திய மருத்துவர்கள் இடம்பெற்று உள்ளார்கள். குறிப்பாக இடம் இடம்பெற்ற மருத்துவர்கள் ஸ்ரீனிவாசன், ரத்தினம் சிவக்குமார், வெங்கடேஷ் பிரசன்னா, லலிதா பிரசன்னா ஆகியோர் 4 பேரும் மதுரையில் புகழ்பெற்ற அர்விந்த் கண் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications