Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஆண்டு "அக்னிபாத்" வீரர்களின் எதிர்காலம் என்னாவது? வாழ்வே மண்ணாவது.? சு.வெங்கடேன் கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ் காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்.

 Madurai Member of Parliament Su Venkatesan raised a question about agneepath

முன்னாள் இராணுவத்தினருக்கு மறு வேலை வாய்ப்பிற்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அப்பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் எவ்வளவு சதவீதம் உள்ளனர் ? என்பதே என் கேள்வி. ( நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் : 1149 ஜூலை 22, 2022)

அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு இணைய அமைச்சர் அஜய் பட் தந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

முன்னாள் இராணுவத்தினருக்கு

* மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P), மத்திய ஆயுதப் படை (CAPFs), (10 சதவீதம் - குரூப் "சி " - 10 சதவீதம், குரூப் டி - 20 சதவீதம்,

* மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவி வரையிலான நேரடி நியமனங்களில் 10 சதவீதம்.

* மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம்

* பாதுகாப்பு காவல் கார்ப்ஸ் (DSC) - 100 சதவீதம்

என்ற அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.

இதனடிப்படையில் பணி நியமனங்கள் பெற்றவர்கள்

2014 - 2322

2015 - 10982

2016 - 9086

2017 - 5638

2018 - 4175

2019 - 2968

2020 -. 2584

2021 - 2983

2015, 2016 இரண்டு ஆண்டுகளில் முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையோடு 2017 - 2021 ஐந்தாண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு இருக்கிறது. 2015 இல் 10000 ஐ தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள் 2019 - 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தலா 3000ஐ கூட கடக்கவில்லை.

சில நேரம் எண்ணிக்கை கூட சரியான சித்திரத்தை தராது. ஆகவே அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது என்று பார்த்தால் அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளன.

இது 30.06.2021 இல் உள்ள நிலைமை.

முன்னாள் இராணுவத்தினர் சதவீதம் இதுதான்.

1. மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P) குரூப் சி -1.39 சதவீதம், குரூப் டி - 2.77.

2. மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), குரூப் சி - 1.14 சதவீதம், குரூப் டி - 0.37 சதவீதம்

3. பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 9.10, குரூப் - 21.34

4 மத்திய ஆயுதப் படை (CAPFs) குரூப் "ஏ"2.20

குரூப் "பி" 0.87

குரூப் "சி" 0.47

குரூப் "டி" 0.00

அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அதிக பட்ச சதவீதம் 3 சதவீதத்தை தாண்டவே இல்லை. ஒரு சதவீதத்திற்கும் கீழே இருக்கிற இடங்கள் உள்ளன. ஜீரோ சதவீதம் கூட உள்ளது.

ஏற்கெனவே உள்ள முன்னாள் இராணுவத்தினர் நிலைமையே இதுதான். மறு வேலை வாய்ப்பு இல்லை. வேலை கிடைத்தால் இருந்திருக்கக் கூடிய இராணுவப் பணியின் கடைசி ஊதியம் புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது என்ற நடைமுறைக்கும் இடம் இல்லை.

Recommended Video

    Agnipath In Indian Army | Agnipath என்றால் என்ன? யார் இந்த Agniveer? | #Defence

    20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?" என வினவியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+