ஸ்டாலின் மதுரையில் தரப்போகும் சக்சஸ் மந்திரம்? தென் மண்டலத்தின் கிங் யார்? இன்று பூத் ஏஜெண்ட் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மாநகரில் இன்று அதாவது பிப்ரவரி 21 ம் தேதி அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்புடன் காணப்படுகிறது... காரணம் மதுரையில் இன்று தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் பங்கேற்பதுடன், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளது, தொண்டர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது..

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நடிகர் விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சி என 4 நான்கு முனைப் போட்டிக்கான சூழல் நிலவுகிறது.

DMK Flexes

நான்கு முனை போட்டி

இந்த அரசியல் போரில் தங்கள் பலத்தை நிரூபிக்கவும், தேர்தலுக்கான அடித்தளத்தை பலப்படுத்தவும் ஆளும் கட்சியான திமுக கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் இன்று தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் மாலை 5 மணியளவில் தொடங்கும் இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மதுரை பூத் கமிட்டி மாநாடு

தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முகவர்கள் கலந்துகொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தின் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் முகவர்களுக்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

அவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட உள்ளன. தேர்தல் சமயத்தில் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்.

திமுக பலே ஏற்பாடு

மாநாட்டுக்கு முன்னதாக, முதலமைச்சர் பல்வேறு அரசு திட்டங்களையும் இன்று தொடங்கி வைக்கிறார். காலை 11.35 மணிக்கு வடபழஞ்சியில் உள்ள எல்கார்ட் தொழில்நுட்பப் பூங்காவில் திறன் மேம்பாட்டு மையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், மதியம் 1 மணிக்கு வண்டியூர் கண்மாய் பூங்காவைத் திறந்து வைத்துப் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

மாலையில் காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் 'மறவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இரவு 7.35 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் - அட்வைஸ்?

அரசியல் ரீதியாகப் பார்த்தால், இந்த மாநாடு திமுகவுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. தென் மாவட்டங்களில் திமுக தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளவும், புதிதாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளின் வருகையால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்கவும் இந்த முகவர்கள் மாநாடு ஒரு கேடயமாக அமையும்.

தேர்தல் களத்தில் நேரடியாகப் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகளுக்கு அளிக்கப்படும் இந்த உற்சாகம், அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்தும். மேலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதிலும், தேர்தல் வெற்றியை உறுதி செய்வதிலும் இந்த நிகழ்வு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+