மதுரை, ஈரோடு, நாகையில் சதமடித்த வெயிலுக்கு இதமாக இடி மின்னலுடன் கனமழை - என்ஜாய் மக்களே
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்திய நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை காலமாக இருந்தாலும் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தது. மதுரையில் அதிகபட்சமாக 102.2 பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. ஈரோடு, கடலூர், தூத்துக்குடி, நாகையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை, வேலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் பதிவானது. இந்த நிலையில் வெயிலுக்கு இதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் 30ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம்
வெப்ப சலனத்தின் காரணமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இடி மின்னல் மழை
தமிழ்நாட்டில் வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி ,ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிதமான மழை
28ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

29,30ஆம் தேதிகளில் மழை
வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் உள் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

வெப்பநிலை
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி ,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அரபிக்கடலில் காற்று
இன்று முதல் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்ஜாய் மக்களே
தென்மேற்குப் பருவமழை காலத்தில் பல மாவட்டங்களில் நேற்று வெயில் சுட்டெரித்தது. மதுரையில் அதிகபட்சமாக 102.2 பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. ஈரோடு, கடலூர், தூத்துக்குடி, நாகையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை, வேலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் பதிவானது. வெயிலுக்கு இதமாக மழை பெய்யும் என வானிலை அறிவித்துள்ளதால் அனுபவிக்கத் தயாராகுங்கள் மக்களே.












Click it and Unblock the Notifications