சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இந்தியாவில் தற்போதைய நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்களில் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,262,503 பேர் குணமாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 257 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,846,082 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160983 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மிக மோசமான நிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 35952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 26,00,833 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 22,83,037 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 53975 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளா

கேரளா

கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,11,898 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,82,668 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4540 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,78,478 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,47,781 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12471பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,73,219 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,50,091 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12641 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,95,879
பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,85,209 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7201 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
Maharashtra shows a spike in daily cases: 11,846,082 people affected by Coronavirus in India so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X