அப்பவே தற்கொலை செய்திருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.. கதறி அழும் மகரிஷி பள்ளி ஆசிரியர் ஆனந்த்
சென்னை: என்னிடம் படித்த மாணவ, மாணவிகளை எனது குழந்தைகளாகவே பார்த்தேன் என சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அவரிடம் படித்த மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்து வந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன் தினம் ஆனந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் வைத்து கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

கண்ணீர் விட்ட ஆசிரியர்
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் அளித்த வாக்குமூலத்தில் என்னிடம் கல்வி பயின்ற மாணவர்களை எனது குழந்தைகளாகவே நான் நினைத்தேன். எனது பாடம் நடத்தும் முறையை பார்த்து குழந்தைகளும் என்னிடம் பிரியமாக பழகினார்கள்.

ஆடையை சரி செய்தேன்
என்னிடம் படித்த மாணவிகள் சரியாக ஆடை அணிய வேண்டும் என நினைப்பேன். ஆடை களைந்திருந்தாலும் அதை நான் சரி செய்துள்ளேன். அப்போது கூட நான் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு என்னை குற்றவாளியாக்கியுள்ளார்கள்.
Recommended Video

ஆதரவு
என்னை பற்றி நீங்கள் (போலீஸார்) விசாரிக்க தொடங்கியவுடனேயே நான் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் என் மீது யாரும் புகார் கொடுக்காததால் அந்த முடிவை கைவிட்டேன். மேலும் நான் இல்லாவிட்டால் எனது தாயாரும் ஆதரவற்றவராகிவிடுவார் என்பதால் அந்த முடிவை கைவிட்டேன்.

போலீஸ் பாதுகாப்பு
ஆனால் நான் தவறு செய்துவிட்டேன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தவுடனேயே நான் இறந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்த் மனநிலை உடைந்து காணப்படுவதால் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications