ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை! முக்கிய ஆவணங்கள் திடீர் மாயம்? டென்ஷனான நீதிபதி! ஒரே பரபரப்பு
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இன்று விசாரணை போது, அங்கு நடந்த சம்பவத்தால் நீதிபதி கடும் கோபம் அடைந்தார்.
Recommended Video
கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி பாலியல் தொல்லை அளித்தாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகள் கூறிய பதிலைக் கேட்டு நீதிபதிகள் கோபமடைந்தனர்.
ஒரு அடிதானே காட்டாறு ஓடுதுனு அலட்சியம் வேண்டாம்.. அனிமேஷன் வீடியோவுடன் எச்சரிக்கும் ஐபிஎஸ்

பாலியல் தொல்லை
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது தமிழக போலீஸில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

புகார்
இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக இருந்த திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் அப்போது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், புகார் அளிக்கச் சென்ற போது, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்த செங்கல்பட்டு எஸ்.பி மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.

மிரட்டல்
அதாவது புகார் அளித்தால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டும் வகையில் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாயம்
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கின் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி - பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் மற்றும் அவர்களுக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் தகவல்கள் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கிடைத்தது
அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவண நகல்களை மீண்டும் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். பெண் எஸ்பி தொடர்பான வழக்கிலேயே முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நீதிமன்ற ஊழியர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தீவிரமாகத் தேடியுள்ளனர். அப்போது அங்கிருந்த ஆவணங்கள் கிடைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.