• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கலாய்ப்பது கூட தெரியாமல்.. காமெடி மெசேஜ்களை உண்மையென நம்பிய கட்ஜு.. இந்திக்கு ஆதரவாக பேசி சர்ச்சை!

|

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இந்தி -தமிழ் குறித்து பேஸ்புக்கில் போஸ்ட் செய்து தற்போது டிரெண்டாகி உள்ளார். இந்திக்கு ஆதரவாகவும், தமிழுக்கு எதிராகவும் இவர் பேசினார். இந்த நிலையில் இவரை நெட்டிசன்கள் பேஸ்புக்கில் வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

திமுக எம்பி கனிமொழி இந்திக்கு எதிராக குரல் கொடுத்ததில் இருந்து தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது. இந்தி தெரியாது என்று கூறிய கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று சிஐஎஸ்எப் அதிகாரி கேட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இவருக்கு ஆதரவாக நாடு பல்வேறு மாநிலங்களில் மக்கள் குரல் கொடுத்து இருந்தனர். இந்தி மட்டுமே இந்தியா கிடையாது. மற்ற மாநில மொழிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும், என்று

சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்!

கட்ஜு என்ன சொன்னார்

கட்ஜு என்ன சொன்னார்

இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இந்த இந்தி - தமிழ் பிரச்சனை குறித்து டிவிட் செய்து இருந்தார். அதில், இந்தியாவில் எல்லா மொழியையும் மதிக்க வேண்டும். ஆனால் உண்மையில் இந்திதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்தியை மகாராஷ்டிரா, குஜராத் , பஞ்சாப், பெங்காளி, காஷ்மீர், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் பேசுகிறார்கள். பாகிஸ்தானிலும் கூட பேசுகிறார்கள். இந்தியை திணிக்க கூடாது ஆனால் எல்லோரும் கற்க வேண்டும்.

இந்தி முக்கியம்

இந்தி முக்கியம்

எனக்கு புரியவில்லை. ஏன் தமிழர்கள் எப்போது இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று. யாரும் அவர்கள் மீது இந்தியை திணிக்கவில்லை. அவர்கள் கற்க விரும்பினால் கற்கலாம். இல்லையென்றால் வேண்டாம். என்னை பொறுத்தவரை இந்திதான் இணைப்பு மொழி. இந்தியாவில் 50% மக்கள் இதை பேசுகிறார்கள். இதை படிப்பது உங்கள் விருப்பம். இது என்னுடைய கருத்து மட்டுமே, நீங்கள் இதை ஏற்க வேண்டியது இல்லை என்று கட்ஜு குறிப்பிட்டு இருந்தார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

கட்ஜுவின் இந்தி ஆதரவு காரணமாக தமிழர்கள் பலர் பேஸ்புக்கில் அவரை கிண்டல் செய்து போஸ்ட் போட்டு வந்தனர். கட்ஜு இப்படி பேசி இருக்க கூடாது. ஒரு முன்னாள் நீதிபதி, இப்படி ஒரு பிரிவுக்கு சார்பாக பேச கூடாது. அவர் நேர்மையாக, நடுநிலையாக இருக்க வேண்டும், இந்தி என்ற மாயையை அவர் புகழ கூடாது என்று நார்மலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

கிண்டல்

கிண்டல்

இதை தொடர்பாக பேஸ்புக்கில் அவருக்கு ஒரு நபர், எனக்கு தெரியாது. இதனால் நான் அமெரிக்காவில் இந்தியர்களுடன் பேச முடியாமல் கஷ்டப்படுகிறேன் என்று சீரியஸாக மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை ஷேர் செய்து இருந்த கட்ஜு, தமிழக கட்சிகளின் அரசியல் காரணமாக தமிழக மக்கள் இந்தி கற்க முடியாமல் போய்விட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நிறைய மெசேஜ்களை கட்ஜு பின் பகிர்ந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதுவரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டு இருந்தது. ஆனால் இதற்குபின்தான் சர்ச்சையை ஆரம்பித்தது. அதன்படி கட்ஜுவிற்கு பேஸ்புக்கில் இருக்கும் சில தமிழர்கள் பொய்யாக மெசேஜ் அனுப்ப தொடங்கினார்கள். நான் இந்தி தெரியாமல் கஷ்டப்படுகிறேன் என்று காமெடியாக பலர் கட்டுக்கதைகளை எழுதி அனுப்ப தொடங்கினார்கள்.

உதாரணத்திற்கு பிரபு டி சங்கர் என்பவர் எழுதி இருக்கும் இந்த போஸ்டில், இந்தி தெரியாத காரணத்தால் என்னால் டிக்கிலோனா, ஜில் ஜங் ஜக் விளையாட்டுகளை வடஇந்தியர்கள் உடன் விளையாட முடியவில்லை என்று இவர் காமெடியாக (They used to play lot of interactive games like Jil Jung Juk and Dikkilona. But we couldn't understand and enjoy the moments with them) குறிப்பிட்டுள்ளார்.

பானிபூரி

பானிபூரி

இதேபோல் இன்னொரு பெர்னாண்டோ என்ற நபர் எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் கடைகளில் பீடா, பானிபூரி வாங்க முடியவில்லை. பானிபூரி விற்கும் நபர்கள் எல்லாம் இந்தி பேசுகிறார்கள். ஜெர்மனியில் சைன்டிஸ்ட் ரிட்டர்ன்ஸ் தமிழர்கள் எல்லாம் இந்தி தெரியாது என்று கூறுகிறார்கள், என்று சீரியசாக கட்ஜுவை கிண்டல் செய்து இருந்தார். அதாவது இந்தி பேசும் நபர்கள் பானிபூரி விற்கிறார்கள், தமிழர்கள் அறிவியலாளர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லாமல் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

எதிலும் உண்மை இல்ல

எதிலும் உண்மை இல்ல

இது போல நூற்றுக்கணக்கான பொய்யான கிண்டல் மெசேஜ்கள் அவருக்கு சென்று இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் உண்மையான மெசேஜ் என்று சீரியசாக எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் கட்ஜு பகிர்ந்து வருகிறார். உண்மையில் தமிழர்கள் இந்தி படிக்க விரும்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கட்ஜு அதை பகிர்ந்து வருகிறார். பேஸ்புக்கில் இருப்பவர்களும்.. இதை வைத்து தொடர்ந்து அவரை சர்காஸ்டிக்காக கிண்டல் செய்து வருகிறார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Makandey Katju fell for funny messages from Tamils claiming they want to study Hindi instead of Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X