"ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க".. உதயநிதிக்கு போன உத்தரவு! தொடங்கிய "மெகா ப்ராஜெக்ட்".. அதிரும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்எல்ஏ மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தரப்பில் இருந்து முக்கியமான அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. சில செயல்படாத அமைச்சர்கள் மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

அதன்பின் இதற்கான முன்னெடுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இந்த அமைச்சரவை மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில்தான் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி ரீதியாக வேறு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசைன்மென்ட்

அசைன்மென்ட்

ஒன்றரை மாதங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் திடீரென ராமநாதபுரத்திற்கு பயணம் மேற்கொண்டார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்குதான் உதயநிதி ஸ்டாலின் திடீரென சென்றனர். அவரின் பயணம் அதிக கவனம் பெற்றது. பொதுவாக இந்த நிகழ்விற்கு பொதுவாக திமுக அமைச்சர்கள் செல்வார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஆட்சியில் இல்லாத நேரங்களில் எம்எல்ஏக்கள் செல்வார்கள். கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் சென்றார், ஆனால் இந்த முறை உதயநிதி ஸ்டாலின் சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு அப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உதயநிதி ஸ்டாலின்.இந்த நிலையில்தான் கடந்த வாரம் தேவர் குரு பூஜை நடைபெற்றது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று இருந்தார். திமுக சார்பாக பல்வேறு அமைச்சர்கள் சென்று இருந்த போதும் உதயநிதியும் இந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகுவலி மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தரப்பில் இருந்து முக்கியமான அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2024 லோக்சபா தேர்தலுக்காக தென் மண்டலத்தில் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கும் ப்ரோஜெக்ட் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தென்மண்டலங்களுக்கு மாதம் ஒரு முறை செல்லுங்கள். அங்கே நிர்வாகிகளை சந்தித்து பேசுங்கள்.

பிளான் என்ன

பிளான் என்ன

முக்கியமாக முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர் மற்றும் கிறிஸ்துவர்களை சந்தித்து பேசுங்கள் என்று திமுக தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுகவிற்காக தேர்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செய்து வருகிறார். அதேபோல் நெல்லை, தூத்துக்குடியில் கனிமொழி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். இந்த நிலையில்தான் மற்ற தென் மாவட்டங்களில் உதயநிதி களமிறக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

சந்திப்பு

சந்திப்பு

இனி மாதம் ஒரு முறை உதயநிதி ஸ்டாலின் தென் மண்டலங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பாஜக அமைச்சர்கள் பல தென் மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து வரும் நிலையில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலினும் தென் மண்டலங்களுக்கு செல்லும் திட்டத்தில் இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அவரின் உடல்நிலை இப்போது சரியில்லாத காரணத்தால் அந்த திட்டம் உதயநிதியிடம் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு ஜாதி

இரண்டு ஜாதி

ஒரு பக்கம் தேவர் சமூகம்.. இன்னொரு பக்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்று இரண்டு பிரிவினரிடம் இருந்தும் ஆதரவு பெறும் வகையில் உதயநிதி இந்த பயணங்களை மேற்கொண்டு உள்ளார். இந்த தேவேந்திர குல வேளாளர் பிரிவினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் பட்சத்தில் அது மிகப்பெரிய கேம் சேஞ்சாக அமையும். தென் மண்டலத்தில் இவர்களின் ஆதரவை பெறும் கட்சி 2024 லோக்சபா தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும். இந்த நிலையில்தான் இவர்களின் ஆதரவை பெறும் வகையில் உதயநிதியை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதேபோல் தேவர் சமூக வாக்குகளும் முக்கியம் என்பதால் குரு பூஜைக்கும் உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+