• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சமையல்கட்டிலிருந்து சதி வேலை செய்தது அரசியலா..? விட்டு "விளாசி தள்ளிய" கமல்ஹாசன்.. அனல் பறந்த பேச்சு

|

சென்னை: "சமையல் கட்டில் இருந்து சதிவேலை செய்ததெல்லாம் அரசியலா.." என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். இது திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி என்பதால் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தப் பிரச்சார கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். அந்தப் பகுதியே களை கட்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் டார்ச் லைட்டு சின்னங்களுடன் கூடிய தோரணங்களை பார்க்க முடிந்தது.

திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவு... மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் நேர்காணல்

தூது விடும் கட்சிகள்

தூது விடும் கட்சிகள்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பார்த்து பல கட்சிகள் தூது விட்டன என்று தனது பேச்சின் ஆரம்பத்திலேயே அப்ளாஸ் அள்ளினார் கமல்ஹாசன். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்.. கமல்ஹாசன் விற்பனைக்கு அல்ல.. மக்கள் நீதி மய்யம் விற்பனைக்கு அல்ல.. தமிழக மக்களும் விற்பனைக்கு அல்ல.. என்று திட்டவட்டமாக சொல்லிய கமல்ஹாசன், கியரை மாற்றி ஆவேசப் பேச்சுக்கு அடித்தளம் போட்டார்.

சமையலறையிலிருந்து சதிவேலை

சமையலறையிலிருந்து சதிவேலை

கமல்ஹாசன் என்ன பேசினார்? இதோ அவரது வார்த்தைகள்: விற்பனை என்றதும் எனக்கு ஒன்று நினைவு வந்துவிட்டது.. ஒரு "அம்மையார்" அற்புதமான வாக்கியம் சொன்னார். அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று. இந்த அம்மா அரசியல் என்று உத்தேசித்தது எதை? இதுநாள் வரை அவர் செய்தது அரசியல் என்றால், என்ன அரசியல் செய்தார்? சமையலறையிலிருந்து சதி வேலை செய்தது அரசியல் என்று ஆகிவிட்டால், காந்தி, காமராஜர் செய்ததெல்லாம் என்னவென்று சொல்வது.

தொடர் கொள்ளை தாங்க முடியல

தொடர் கொள்ளை தாங்க முடியல

சரி அது தொலையுது விடுங்கள்.. இந்த முடிவை 30 வருடங்கள் முன்பாக எடுத்து இருந்தால், தமிழகம் பிழைத்து இருக்குமே. அப்படி செய்து இருந்தால் மக்கள் நீதி மய்யமே கூட வந்து இருக்காது. இந்தத் தொடர் கொள்ளை தாங்க முடியாமல்.. இனி பரவாயில்லை.. நமக்கு சுமார் அரசியல் தெரிந்தாலே போதும், அரசியலுக்கு வரலாம் என்று நினைத்துதானே வந்தேன். இவர்களுக்கு மட்டுமே தெரிந்தா அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மறந்தால் சரித்திரம் நிகழும்

மறந்தால் சரித்திரம் நிகழும்

அந்த அம்மா விலகி விட்டாரே அவரைப் போட்டு, இப்படி சாத்து சாத்து என்று சாத்துகிறீர்களே.. இது நியாயமா? பெண்களை மதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்படி சாத்தலாமா? என்று நீங்கள் கேட்கலாம். செய்த தப்பு, தப்பு தான். மன்னிப்பது மக்களின் பெருந்தன்மை.. மறக்கவே கூடாது.. மறந்து விட்டால் அந்த சரித்திரம் மீண்டும் நிகழும். அதனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

காவிச் சாயம்

காவிச் சாயம்

வாழ்நாள் முழுக்க பகுத்தறிவாளனாக வாழ்ந்த என்மேல் காவி சாயம் பூசுகிறார்கள். நான் நேர்மையில் குளித்தால் காவி சாயம் காணாமல் போய்விடும்.

தேர்தல் வருவதால் வலுவான ஜாதிகளை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதால் எப்படி குட்டி கரணம் போட வேண்டுமோ அப்படி போடுகிறார்கள்.

இவ்வளவு நாட்களாக வன்னியர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? தேர்தல் நெருங்கும் போது மட்டும்தான் அவங்க உங்களுக்கு தெரியுமா.

ஆளுநருக்கு கேள்வி

ஆளுநருக்கு கேள்வி

உடனடியாக அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி விட்டார். அந்த மாண்புமிகு ஆளுநரிடம் நான் கேட்கிறேன்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றபோது தாமதித்தீர்களே.. தனது இளமையை எல்லாம் தொலைத்துவிட்ட பேரறிவாளன் விஷயத்திலும் நீங்கள் தாமதம் செய்தீர்களே.. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

 
 
 
English summary
Makkal needhi maiam party chief Kamal Haasan criticise Sasikala indirectly, and says people should not forget their mistakes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X