சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. சென்னை சிட்டி மற்றும் புறநகர் தொகுதிகளை மொத்தமாக அள்ளும் திமுக - மாலை முரசு சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகர் தொகுதிகளை திமுக மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது என்று மாலை முரசு சர்வே கூறியுள்ளது.

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

வடக்கு மண்டலத்தில் திமுக ஆதிக்கம்.. அதிமுகவின் கையும் ஓங்குகிறது.. 5-ல் செம போட்டி தந்தி டிவி சர்வே!வடக்கு மண்டலத்தில் திமுக ஆதிக்கம்.. அதிமுகவின் கையும் ஓங்குகிறது.. 5-ல் செம போட்டி தந்தி டிவி சர்வே!

ஆலந்தூரில் திமுக

ஆலந்தூரில் திமுக

இந்த வகையில் மாலை முரசு டி.வி நடத்திய கருத்து கணிப்புகள் தினமும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆலந்தூர் தொகுதியில் திமுக 46%, அதிமுக+ 40%, அமமுக 3%, நாம் தமிழர் 4%, மநீம+ 5% வாக்குகளை பெறும் என்று கணிப்பு கூறியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக 47%, அதிமுக+ 42%, அமமுக 4%, நாம் தமிழர் 3%, மநீம+ 2% வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரில் வெற்றி யாருக்கு?

சோழிங்கநல்லூரில் வெற்றி யாருக்கு?

வேளச்சேரி- தொகுதியில் அதிமுக 43%, திமுக+ 42%, அமமுக 1%, நாம் தமிழர் 3%, மநீம+ 9% வாக்குகளை பெறும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக 47%, அதிமுக+ 39%, அமமுக 2%, நாம் தமிழர் 4%, மநீம+ 6% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு சர்வே கணித்துள்ளது. மைலாப்பூர்
தொகுதியில் அதிமுக 45%, திமுக+ 42%, அமமுக 1%, நாம் தமிழர் 3%, மநீம+ 7% வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

தி.நகரில் கடும் போட்டி

தி.நகரில் கடும் போட்டி

தியாயராய நகரில் திமுக 42%, அதிமுக+ 42%, அமமுக 2%, நாம் தமிழர் 2%, மநீம+ 7% வாக்குகளை பெறும் என்று கணித்துள்ளது. இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று சர்வே மூலம் தெரியவருகிறது. விருகம்பாக்கம் தொகுதியில் திமுக 44%, அதிமுக+ 41%, அமமுக 4%, நாம் தமிழர் 3%, மநீம+ 7% வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்று சர்வே கூறியுள்ளது. எழும்பூர் தொகுதியில் திமுக 47%, அதிமுக+ 42%, அமமுக 2%, நாம் தமிழர் 3%, மநீம+ 5% வாக்குகளை பெறும் என்று கூறியுள்ளது.

துறைமுகம் யாருக்கு?

துறைமுகம் யாருக்கு?

துறைமுகம் தொகுதியில் திமுக 50%, அதிமுக+ 39%, அமமுக 2%, நாம் தமிழர் 3%, மநீம+ 4% வாக்குகளை பெறும் என்று சர்வே கணித்துள்ளது. அண்ணா நகர் நகர் தொகுதியில் திமுக 44%, அதிமுக+ 42%, அமமுக 3%, நாம் தமிழர் 3%, மநீம+ 6% வாக்குகளை பெறும். பெரம்பூர் தொகுதியில் திமுக 46%, அதிமுக+ 40%, அமமுக 5%, நாம் தமிழர் 4%, மநீம+ 3% வாக்குகளை பெறும் என்று சர்வே தெரிவித்துள்ளது.

வில்லிவக்கம் திமுக ஆதிக்கம்

வில்லிவக்கம் திமுக ஆதிக்கம்

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக 45%, அதிமுக+ 41%, அமமுக 3%, நாம் தமிழர் 3%, மநீம+ 6% வாக்குகளை பெறும் . திருவிக நகர் தொகுதியில் திமுக 48%, அதிமுக+ 40%, அமமுக 2%, நாம் தமிழர் 3%, மநீம+ 6% வாக்குகளை பெறும். மாதவரம் தொகுதியில் திமுக 44%, அதிமுக+ 38%, அமமுக 5%, நாம் தமிழர் 5%, மநீம+ 6% வாக்குகளை பெறும்.

ஆர்.கே.நகரில் யார்?

ஆர்.கே.நகரில் யார்?

ஆர்.கே நகர் - அதிமுக 45%, திமுக+ 43%, அமமுக 4%, நாம் தமிழர் 3%, மநீம+ 4% வாக்குகளை பெறும்என்று மாலை முரசு சர்வே கணிப்பில் கூறியுள்ளது. அம்பத்தூர் தொகுதியில் திமுக 45%, அதிமுக+ 41%, அமமுக 4%, நாம் தமிழர் 4%, மநீம+ 3% வாக்குகளை பெறும் என்று சர்வே மூலம் தெரியவந்துள்ளது. மதுரவாயல் தொகுதியில் திமுக 41%, அதிமுக+ 41%, அமமுக 4%, நாம் தமிழர் 5%, மநீம+ 4% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு சர்வே கூறியுள்ளது. இந்த 16 தொகுதிகளில் 10-ல் திமுக வெற்றியை நிலை நாட்டும் என்று கணிப்பு கூறியுள்ளது. சில இடங்களில் பலத்த போட்டி இருக்கும் என்றும் இந்த கணிப்பின் மூலம் தெரியவருகிறது.

English summary
According to the Malai Murasu survey, the DMK dominates the Chennai and suburban constituencies the most
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X