தண்டனை வாங்கி கொடுத்ததால் மாட்டிவிட்ட சக காவலர்கள்.. மாம்பலம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்
சென்னை: நகைளை மீட்டதை குறைத்து காண்பித்தாக சக காவலர்கள் கூறிய குற்றச்சாட்டின் காரணமாக மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத் குமார், மீது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே குட்கா முறைகேடு வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் ஆவார்
மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார், தனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களான சதீஷ்குமார், சிவபாலன், மனோஜ், விஜய் கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் தன்னை மிரட்டியதாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவலர்கள் 4 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 4 காவலர்களும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மாம்பலம் ஆய்வாளர் சம்பத் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்கள். கொள்ளை வழக்கு ஒன்றில் 100 சவரன் நகை மீட்கப்பட்டது என்றும் ஆனால் சம்பத் அதைக் குறைத்துக் காட்டி அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தங்கள் புகாரில் கூறினர். மேலும் சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சம்பத் மீது அவர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து 4 காவலர்களின் புகாரை விசாரித்த காவல்துறை டிஜிபி, மாம்பலம் காவல் ஆய்வாளர் சம்பத் குமாரை மதுரை மண்டலத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அங்கு அவருக்கு பணி எதுவும் ஒதுக்கப்படாமல் தெற்கு மண்டல ஐஜி ராஜேஸ்வரன் முன்னிலையில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆய்வாளர் சம்பத்குமார், சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது எழுந்த குட்கா முறைகேடு தொடர்பாக சம்பத் குமார் மீது புகார் கிளம்பியது.இதனால் சம்பத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications