அதிகரிக்கும் கொரோனா பீதி.. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு.. சுகாதாரத்துறை மேஜர் உத்தரவு!
சென்னை: சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளுக்கும் கட்டாய காய்ச்சல் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்காகவே தனியாக காய்ச்சல் பிரிவையும் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பீதியில் இந்தியா
சீனாவில் கடந்த 2 மாதங்களாக புதுவகையான உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த புதிய தொற்று பெருமளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தினந்தோறும் சீனாவில் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்று பாதிப்பால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஜப்பான், பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சீனாவில் பரவும் பிஎப்.7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கும் வந்த கொரோனா
இதையடுத்து, இந்த வைரஸ் காய்ச்சல் மேலும் பலருக்கு பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், சீனா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மதுரை, கோவை வந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது, உருமாறிய கொரோனாவா என்பதை கண்டறிய பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

புறநோயாளிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை
இதனால் தமிழகத்திலும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். புறநோயாளிகளுக்காக தனியாக காய்ச்சல் பிரிவை ஏற்படுத்த வேண்டும். பொது மருத்துவத்துறை மற்றும் நுரையீரல் மருத்துவத்துறையுடன் இணைந்து இதனை செயல்படுத்துவது அவசியம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
கொரோனா நோயாளிகளை உடல்நிலை அடிப்படையில் தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை மேற்கொண்டு, அவர்களது உடல்நிலை தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். இவர்களை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பொது மருத்துவர்கள் அல்லது சுவாச நோய் மருத்துவர்களே முடிவெடுக்க வேண்டும். தேவைக்கேற்ப ஆக்சிஜன் இருப்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். படுக்கைகள், பரிசோதனைக் கருவிகளும் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications