மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மிககனமழை.. சென்னையையும் விடாதாம்..புது அப்டேட்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானது. இந்த புயல் நேற்று இரவு மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. மேலும் புயல் கரையை கடப்பதால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரையை கடந்த புயல்
இந்நிலையில் தான் இந்த புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியது. இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

8 மாவட்டங்களில் மிக கனமழை
அதன்படி இன்றைய மழை நிலவரம் பற்றி சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் கூட தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

7 மாவட்டங்களில் கனமழை
மேலும் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களிலும் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணி தீவிரம்
மேலும் மாண்டஸ் புயலால் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கடற்கரையில் நிறுத்தப்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. இதனை ஆய்வு செய்து சேத சீரமைப்பு பணியை தமிழக அரசு துவக்கி முடுக்கி விட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதோடு, அதுதொடர்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications