சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் எம்எல்ஏ தாரகை கத்பர்த் அமர்ந்தது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்த்தின் இருக்கை மாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மேலும் தாரகையின் இருக்கை ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ்வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது: சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான்.

Manickam Tagore

சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு மாண்புமிகு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம்.

செய்தியை செய்தியாகவே பாருங்கள்; அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்! இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

தமிழக சட்டசபையில் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்களுடன் அமர்ந்துள்ளனர்.

திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் எதிர்க்கட்சியினருக்கான வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இத்தனை நாட்களாக ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்த்துக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் சவுமியா அன்புமணிக்கு அருகே தாரகை அமர்ந்திருந்தார். இது ஏன் என தெரியவில்லை. அவரது கட்சியை சேர்ந்த மற்ற 4 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரித்த நிலையில் தாரகையின் இந்த இருக்கை மாற்றம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சபாநாயகர் கூறியிருப்பதாவது: சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவராக தாரகை கத்பர்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். அதனால்தான் தற்போது முன்வரிசையில் இருக்கை ஒதுக்கியுள்ளோம் என ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+