சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"PeriAir"..இதுதான் நேரம்.. விமான சேவையை தமிழக அரசே ஏன் நடத்தக் கூடாது?.. டி.ஆர்.பி. ராஜா மாஸ் ஐடியா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசே விமான சேவையை ஏன் ஏற்று நடத்தக் கூடாது. அந்த சேவைக்கு Peri Air பெயரை வைத்தால் எப்படி இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா ட்வீட் போட்டுள்ளார்.

சென்னையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விமான சேவை இருப்பதை போன்று முக்கியமான இடங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல தமிழகத்தில் 7 இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன.

அவை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களாகும். இந்த 7 இடங்களில் உள்ள விமான சேவைகளை பயன்படுத்தி அந்த விமான நிலையம் உள்ள பகுதிகளுக்கு அருகே உள்ள இடங்களுக்கு செல்லலாம்.

திரண்ட 50000 தொண்டர்கள்.. ராகுல் காந்தியின் பாரத் ஜுடோ யாத்திரை.. 2 நாள் பயணம் தொடங்கியது! திரண்ட 50000 தொண்டர்கள்.. ராகுல் காந்தியின் பாரத் ஜுடோ யாத்திரை.. 2 நாள் பயணம் தொடங்கியது!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி


உதாரணமாக கன்னியாகுமரி செல்ல வேண்டுமானால் சென்னை டூ தூத்துக்குடி போய் அங்கிருந்து கார் மூலமோ, பேருந்து மூலமோ குமரிக்கு செல்லலாம். இதற்காக தனியார் விமான சேவைகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் கட்டணங்கள் அதிகமாக வசூலிப்பதாக சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி

அந்த வகையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல ரூ 17,748 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போல் இன்னொரு நேரத்தில் இயக்கப்படும் விமானத்தில் ரூ 20,665 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரு விமான சேவைகளுமே ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இதுகுறித்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர் பி ராஜா ட்வீட் போட்டுள்ளார்.

நேரம் வந்துவிட்டதா

நேரம் வந்துவிட்டதா

அந்த ட்வீட்டில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வர ஏடிஆர் விமானத்தில் இவ்வளவு கட்டணமா, இந்த காசுக்கு பேசாம சிங்கப்பூருக்கே போகலாமே! மாநில அரசே சொந்தமாக விமான சேவையை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?

நல்ல பெயரா இருக்கே

நல்ல பெயரா இருக்கே

PeriAir என்ற பெயரை நல்ல பெயராக தெரிகிறதே. அந்த பெயரை வைத்து ஏன் விமான சேவையை தொடங்கக் கூடாது? தமிழகத்தில் அனைவருக்குமான சமமான வளர்ச்சி அதாவது திராவிட மாடலுக்கு சிறகை கொடுத்தவர் பெரியார் என ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் சிலர் வரவேற்றும் எதிர்த்தும் ட்வீட் போட்டுள்ளார்கள்.

English summary
Mannargudi MLA T.R.B.Rajaa gives idea to start state owned flight services as flight charges are high in ATR flights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X