மஞ்சப்பையுடன் மாஸாக வந்த மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா..! சட்டப்பேரவை கூட்டத்தில் ருசிகரம்..!
சென்னை: 2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்ற நிலையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிஆர்பி ராஜா சட்டப்பேரவைக்கு ஆவணங்களை ஸ்டைலாக மஞ்சள் பையில் கொண்டு வந்தது சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறது.
பிளாஸ்டிக்குக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு இயக்கமானது மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு விடுத்த அரசாணையில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணியினாலான சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மஞ்சள் பையை பயன்படுத்த மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் மஞ்சள் பை திட்டம்
மேலும் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னை கோயம்பேடு சந்தையில் பிளாஸ்டிக் இல்லா சந்தையாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தொடர்ந்து நெகிழி பொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்காட்சி அவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிலையில் முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கிவைத்த கலைவாணர் அரங்கத்திலேயே தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

எம்எல்ஏ டிஆர்பி ராஜா
ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் மஞ்சப்பை திட்டம் குறித்தும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வருகை புரிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, தான் கொண்டு வந்திருந்த ஆவணங்களை மஞ்சள் பையில் வைத்து தோளில் மாட்டியபடி ஸ்டைலாக வலம் வந்தார்.

ராஜாவுக்கு பாராட்டு
இந்தப் புகைப்படங்கள் டுவிட்டர் பக்கத்தில் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டைலாக மஞ்சள் பையை சுமந்தபடி கலைவாணர் அரங்க வளாகத்தில் சுற்றிவந்த புகைப்படங்களும், அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவிப்போடு நின்று விடாமல் செயலில் காட்டிய இந்த செயலுக்கு ஏராளமானோர் டிவிட்டை பகிர்ந்ததோடு , பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications