வெளிநாடுகளே திரும்பி பார்க்கும்! புதுப்பொலிவு பெறும் மெரினா.. களமிறங்கிய மாநகராட்சி.. பிளான் என்ன?
சென்னை: மெரீனா சாலையை அழகுபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.. இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது.
இந்த நிலையில் மெரினா கட்டுரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மெரினா
கண்ணகி சிலை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதி, உழைப்பாளர், காந்தி சிலை என்று பல சிலைகள், நீர் ஊற்று, அலங்கார கற்கள், சிறிய கூட்டம் நடத்தும் மேடைகள் என்று பல அமைப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு இருக்கும் செயற்கை நீர் ஊற்று சமீபத்தில்தான் சீரமைக்கப்பட்டது. அங்கு விளக்குகளும் வைக்கப்பட்டது. அதேபோல் கல் அலங்கார அமைப்புகளும் சீரமைக்கப்பட்டன.

கடற்கரை
இந்த நிலையில்தான் மெரினாவில் 6 கிமீ சாலை பகுதியை புதிதாக அலங்காரம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இங்கு புதிய அலங்கார அமைப்புகள், கண்கவர் அமைப்புகள், புதிய விளக்கு அமைப்புகள், சிறிய அளவிலான பார்க்குகள், உணவகங்களை வைக்க வசதி என்று பல ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனை
அதன்படி நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில் துறை என்று பல அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த சாலை பகுதிகளில் முக்கியமான அரசு கட்டிடங்கள், அதேபோல் சமாதிகள் உள்ளன. இதனால் எந்த தவறும் நேராமல் புதிய அலங்காரங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் பீச்களை மிஞ்சும் அளவிற்கு வித்தியாசமான அலங்காரங்களை செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

கடைகள்
ஏற்கனவே மெரினாவில் இருக்கும் சாலை ஒரே கடைகள் பயன்படுத்துவதற்காக சிறிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை இன்னும் சாலையோர கடைக்காரர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். ஸ்மார்ட் புஷ் அமைப்பு கொண்ட தள்ளு வண்டிகள் ஆகும். இதை விரைவில் கடைக்காரர்கள் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 29 கோடி ரூபாய் இல்லாமல் மேலும் சில கோடிகள் விரைவில் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications