மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி..விரைவில் நடைமுறைக்கு வரும் சென்னை மேயர் பிரியாவின் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார் அதன்படி அந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
சென்னை மாநகரை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தண்டையார் பேட்டை மண்டலத்தில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 2969 மாணவிகள், ராயபுரம் மண்டலத்தில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவிகள், திரு.வி.நகர் மண்டலத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 3160 மாணவிகள், அண்ணா நகர் மண்டலத்தில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1721 மாணவிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 35 பள்ளிகளைச் சேர்ந்த 898 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 2699 மாணவிகள், அடையாறு மண்டலத்தில் 9 பள்ளிகளைச் சேர்ந்த 2203 பேர் என்று மொத்தம் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், 6ஆம் வகுப்பு மாணவிகள் 3642 பேர், 7ம் வகுப்பு மாணவிகள் 3810 பேர், 8ஆம் வகுப்பு மாணவிகள் 3711 பேர், 9ஆம் வகுப்பு மாணவகள் 3487 பேர் என்று மொத்தம் 159 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications